Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஹெட்ரிக் சாதனை படைத்த சாம் கர்ரன்!

ஹெட்ரிக் சாதனை படைத்த சாம் கர்ரன்!

1 minutes read

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு 167 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இதனிடையே பஞ்சாப் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போது அந்த அணியின் பந்து வீச்சாளர் சாம் கர்ரன் 2.2 ஓவர்களை மாத்திரம் வீசி 11 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளது.

இதன் மூலம் ஐ.பி.எல். அரங்கில் ஹாட்ரிக் எடுத்த 18 ஆவது வீரர் என்ற பெருமையையும் சாம் கர்ரன் பெற்றுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More