Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

3 ஆவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட  மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை அணி 2...

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் –வெற்றி பெற்றது Galle Gladiators!

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் Galle Gladiators அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த...

நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி

இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் இந்திய அணி 372 ஓட்டங்களினால் நியூஸிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அஜாஸ் படேல் சாதனை

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இடது...

லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால தொடர் இன்று ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக்கின் தொடரின் இரண்டாவது பருவகாலதிற்கான முதல் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 5 அணிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்த தொடர்...

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் | பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர்...

ஆசிரியர்

அயர்லாந்தை தோற்கடித்து சூப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

டி-20 உலகக் கிண்ணத்தில் தகுதச் சுற்றில் தமக்கான ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அயர்லாந்துக்கு எதிராக 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள இலங்கை சூப்பர் – 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையை அடைவதற்கு வனிந்து ஹசரங்கா மற்றும் பத்தும் நிசாங்க ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக வலுவான கூட்டணியை பதிவு செய்தனர்.

அது மாத்திரமின்றி இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களும் தங்கொளுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சிறப்பாக செய்து முடித்தமை ஆகும்.

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்ற எட்டாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பின‍ை இலங்கைக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 1.4 ஓவரில் எட்டு ஓட்டங்களை எடுத்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

(குசல் பெரேரா 0, சந்திமால் 6, அவிஷ்க பெர்னாண்டோ 0)

இலங்கையில் முதல் மூன்று விக்கெட்டுகளை இவ்வளவு குறைந்த ஓட்டத்தில் இழந்தது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இலங்கை முதல் மூன்று விக்கெட்டுகளையும் 11 ஓட்டங்களுக்குள் இழந்திருந்தது.

முதல் மூன்று விக்கெட்டுகளை எட்டு ஓட்டங்களில் இழந்த போதிலும், 150 ஓட்டங்களை கடந்த முதல் டெஸ்ட் நாடாக இலங்கை மாறியது.

அதற்கு காரணம் பதும் நிசங்க – வணிந்து ஹசரங்கவின் வலுவான இணைப்பாட்டம் ஆகும். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 82 பந்துகளை பயன்படுத்தி 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

டி-20 உலகக் கிண்ண போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக பெற்றுக் கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 2007 இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 119 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.

இந்த இன்னிங்ஸில் இவர்கள் இருவருமே தங்களது டி-20 கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் அரை சதங்களை பதிவு செய்தனர்.

இறுதியாக வனிந்து ஹசரங்க 47 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டத்துடனும், பதும் நிசாங்க 47 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

பின்னர் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

அணித் தலைவர் தசூன் சானக்க 21 ஓட்டங்களுடனும், சமீர ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

172 ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 4.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களை பெற்றது.

(பால் ஸ்டிர்லிங் 07, கெவின் ஓ பிரையன் 05, கரேத் டெலானி 02)

32 ஓடடங்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும், அயர்லாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ பால்பெர்னி மற்றும் கர்டிஸ் கேம்பர் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை சேர்த்தனர்.

இதன் பின்னர் 12.5 ஆவது ஓவரில் கர்டிஸ் கேம்பர் 24 ஓட்டங்களுடன் தீக்ஷணவின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற, அயர்லாந்து அணி மேலும் 16 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதன்படி அயர்லாந்து 18.3 ஓவரில் 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆல் அவுட் ஆனது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் நமீபியாவுக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதை வென்ற மகேஷ் தீக்ஷனா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார மற்றும் சாமிகா கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹசரங்க தெரிவானார்.

இதன் மூலம் 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

இதேவேளை அயர்லாந்து – நமீபியா அணிகளுக்கு இடையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கையுடன் சேர்ந்து முன்னேறும்.

இதையும் படிங்க

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ்

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா...

லங்கா பிரீமியர் லீக்: கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ

அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ளது.

தொடர்புச் செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாடசாலை மாணவர்களுக்கு வீதி விழிப்புணர்வு கருத்தரங்கு

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது. வீதி...

இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம்

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'...

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் பதிவுகள்

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் | ஜனவரியில் இறுதிக்கட்ட தெரிவுகாண் போட்டி

ஆசிய இளை‍யோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கச் செய்வதற்கான  இலங்கை குழாமை தெரிவு செய்யும் இறுதிக்கட்ட தெரிவுகாண் போட்டி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும் கண்டிப்போம்: மனோ கணேசன்

<சியால்கோட்டில் பிரியந்த குமார படுகொலையும், இலங்கையில் தமிழ், முஸ்லிம் படுகொலைகளும்> இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட்...

சூப்பரான செட்டிநாடு இறால் பிரியாணி

சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெளியானது தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலின் முகப்பு

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவலின் முகப்புப் படம் இன்று வெளியிட்டப்பட்டுள்ளது. குறித்த நாவலை வெளியிடும் தமிழ்நாடு ஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் வேடியப்பன் இன்று வெளியிட்டார். 

நாட்டில் கொரோனாவுக்கு 14 ஆண்களும் 7 பெண்களும் பலி

நாட்டில் நேற்று (04.12.2021) கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு