செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாமில் கொவிட்-19 அச்சுறுத்தல்

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாமில் கொவிட்-19 அச்சுறுத்தல்

0 minutes read

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்த நுவான் துஷாரா கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை அணியின் பயிற்சியாளர் டில்ஷான் பொன்சேகாவும் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக உயிர்-பாதுகாப்பான குமிழியில் இருக்கும் அணி மற்றும் துணை ஊழியர்களிடையே நடத்தப்பட்ட வழக்கமான பி.சி.ஆர். சோதனையின் போது இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

துஷாரா மற்றும் பொன்சேகா ஆகியோர் தற்போது கொவிட்-19 நெறிமுறைக்கு உட்பட்டுள்ளனர் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.