Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பெய்ஜிங் ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ஜேர்மனி!

பெய்ஜிங் ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ஜேர்மனி!

1 minutes read

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், ஜேர்மனி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐந்து தங்க பதக்கங்கள், மூன்று வெள்ளி பதக்கங்கள் என மொத்தம் எட்டு பதக்கங்களுடன் ஜேர்மனி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நான்கு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்கள், நான்கு வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தம் பத்து பதக்கங்களுடன் நோர்வே இரண்டாவது இடத்தில் உள்ளது.

நான்கு தங்கபதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் ஏழு பதக்கங்களுடன் சுவீடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

3 தங்க பதங்கள், மூன்று வெண்கல பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கத்துடன் நெதர்லாந்து நான்காவது இடத்தையும், மூன்று தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்களுடன் சீனா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து அமெரிக்கா, ஒஸ்திரியா, இத்தாலி, ரஷ்யா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More