செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஒருநாள் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா!

ஒருநாள் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா!

1 minutes read

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 96 ஓட்டங்களால் சிறப்பான வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முழுமையாக கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்துள்ளது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 80 ஓட்டங்களையும் ரிஷப்பந்த் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும் ஹெய்டன் வோல்ஸ் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஒடியன் ஸ்மித் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 266 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 37.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியா அணி 96 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒடியன் ஸ்மித் 36 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் மற்றும் பிரசீத் கிருஸ்னா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயஸ் ஐயரும் தொடரின் நாயகனாக பிரசீத் கிருஸ்னாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.