செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி: 8 தங்க பதக்கங்களுடன் ஜேர்மனி தொடர்ந்தும் முதலிடம்!

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: 8 தங்க பதக்கங்களுடன் ஜேர்மனி தொடர்ந்தும் முதலிடம்!

0 minutes read

பீஜிங்கில் இடம்பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நாடுகள் இதுவரை பெற்றுள்ள பதக்கங்களின் அடிப்படையில், ஜேர்மனி தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஜேர்மனி இதுவரையில், 8 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் அடங்கலாக 14 பதக்கங்களை வென்று முதலாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

நோர்வே 8 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா 5 தங்கம் 5 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளது.

நெதர்லாந்து 5 தங்கம் 4 வெள்ளி 2 வெண்கலம் அடங்கலாக 11 பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திலும் சுவீடன் 05 தங்கம், 2 வெள்ளி 3 வெண்கலம் 10 பதக்கங்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளது.

இதேவேளை 6 ஆம் இடத்தில் உள்ள ஒஸ்திரியா 4 தங்கம், 6 வெள்ளி 4 வெண்கலம் அடங்கலாக 14 பதக்கங்களை பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.