செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 2வது இன்னிங்ஸிலும் தென்னாபிரிக்கா தடுமாற்றம்!

2வது இன்னிங்ஸிலும் தென்னாபிரிக்கா தடுமாற்றம்!

1 minutes read

நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், வெண்டர் டுஸன் 9 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பீடுகையில், தென்னாபிரிக்கா அணி 353 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

கிறிஸ்ட்சேர்ச் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுபைர் ஹம்சா 25 ஓட்டங்களையும் வெர்ரின்னே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி 7 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, கெய்ல் ஜேமிஸன், நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்;து அணி, 482 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி நிக்கோல்ஸ் 105 ஓட்டங்களையும் டொம் பிளென்டல் 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஒலிவியர் 3 விக்கெட்டுகளையும் ரபாடா, மார்கோ ஜென்சன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளென்டன் ஸ்டூர்மேன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 387 ஓட்டங்கள் பின்னிலையின் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, இன்றைய இரண்டாம்;நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி நாளை தொடரவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.