செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

1 minutes read

றோயல் – தோமியன் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 143 ஆவது நீலவர்ணங்களின் சமர் சனிக்கிழமை (23) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த போதிலும் சென். தோமஸ் அணி கடைசியாக 2019 இல் வெற்றி பெற்றிருந்தால் டி.எஸ். சேனாநாயக்க கேடயத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது.

துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இப் போட்டியில் இரண்டு அணிகளினாலும் ஓர் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

மந்த கதியில் ஓட்டங்கள் பெறப்பட்ட இப் போட்டியில் சென். தோமஸ் அணி சார்பாக மூவரும் றோயல் அணி சார்பாக ஒருவரும் அரைச் சதங்களைப் பெற்றனர்.

வியாழக்கிழமை ஆரம்பமான இந்த மூன்று நாள் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென். தோமஸ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது.

றோயல் அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். தோமஸ் அணி ஆட்டம் முடிவுக்கு வந்துபோது 6 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்கிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் சார்பாக பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்புன் வீரசிங்க டி.எஸ். சேனாநாயக்க கேடயத்தை இரண்டு அணிகளினதும் தலைவர்களான ரெயான் பெர்னாண்டோ (சென். தொமஸ்), கிஷான் பாலசூரிய (றோயல்) ஆகியோரிடம் வழங்கினார். பரசிளிப்பு வைபவத்தில் இரண்டு கல்லூரிகளினதும் முதல்வர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சென். தோமஸ் 1ஆவது இன்: 242 (செனேஷ் ஹெட்டிஆராச்சி 55, சாருக்க பீரிஸ் 51, மஹித் பெரேரா 33, அணித் தலைவர் கிஷான் பாலசூரிய 56 – 3 விக்., கனிஸ்டன் குணரட்னம் சந்தோஷ் ராமநாயக்க 16 – 2 விக்., ரமிரு பெரேரா 36 – 2 விக்.)

றோயல் 1ஆவது இன்: 219 – 6 விக். டிக்லெயார்ட் (உவிந்து வீரசேகர 66, ரமிரு பெரேரா 34, சினேத் ஜயவர்த 32, கவிந்து டயஸ் 65 – 4 விக்., கெனிஸ்டன் குணரட்னம் 67 – 2 விக்.)

சென். தோமஸ் 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 142 – 6 விக். (ரெயான் பெர்னாண்டோ 74, செனேஷ் ஹெட்டிஆராச்சி 26, கிஷான் பாலசூரிய 56 – 3 விக்., சதிஷ ராஜபக்ஷ 30 – 2 வி.)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.