செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.

0 minutes read

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசையில் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 02 இடங்கள் முன்னேறி உள்ளார்.

இங்கிலாந்து – தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் அப்ரிடி-பும்ரா 828 புள்ளிகளுடன் 4,5-வது இடங்களிலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.