அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தனுஷ்கவுக்குத் தடை

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. 

கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

150,000 அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 3,7 கோடி இலங்கை ரூபா / சுமார  82 லட்ச்ம் இந்திய ரூபா) பிணையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.

அவர் மீதான வழக்க விசாரணை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  தனுஷ்கவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

தினமும் இரவு  9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவத்றகும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனது சம்மதமின்றி தன்னுடன்  தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம்  திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்திருந்தார். 

அதன்பின் தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக  இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது.

ஆசிரியர்