December 7, 2023 2:41 pm

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும் தலைவராக தெரிவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிய நிர்வாக குழுவினர் கடந்த 29 ஆம் திகதியன்று தெரிவு செய்யப்பட்டதுன், ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். புதிய செயலாளராக அஜித் விஜேசிங்க தெரிவானதுடன், பொருளாராக பதவி வகித்து வந்த மங்கள கமகே தொடர்ந்தும் அதே பதவிக்கு தெரிவானார்.

இலங்கை பெட்மிண்டன் சங்க நிர்வாகத்திற்கான தேர்தல் கடந்த 29 ஆம் திகதியன்று நடைபெற்றது. இதில்,  2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை பெட்மிண்டன் சங்கத் தலைவராக இருந்த ரொஹான் டி சில்வா ஏகமனதாக போட்டியின்றி மீண்டும் தலைவராக தெரிவானார்.

ரொஷான் குணவர்தன, ரொஷான் பெர்னாண்டோ, தினேஷ் ஜயவர்தன, புத்திக டி சில்வா, சாமர அலுத்கே, மொஹான் விஜேசிங்க, ஆலியா பைசர் ஆகிய 7 பேர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

பிரதி செயலாளர்களாக ஜாலிய ஜயசேகர மற்றும் டபிள்யூ.பி.ஜி. புஞ்சிஹேவா தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், முன்னாள் தேசிய சம்பியனான ரேணு சந்திரிகா டி சில்வா மற்றும் ஆர்.எம்.எஸ்.ஜி. ரத்நாயக்க ஆகியோர் உப பொருளாளர்களாக தெரிவாகினர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்