செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை உடலில் ஏன் துர்நாற்றம் வருகிறது..உடலில் ஏன் துர்நாற்றம் வருகிறது..

உடலில் ஏன் துர்நாற்றம் வருகிறது..உடலில் ஏன் துர்நாற்றம் வருகிறது..

1 minutes read

ஒரு சிலரின் அருகில் செல்லவே முடியாது அந்த அளவிற்கு உடலில் துர்நாற்றம் அடிக்கும். பாவிப்பய குளிக்கிறானா இல்லையானு கேட்க தோனும். இன்னும் சிலர் தூரத்தில் நடந்து வந்தாலே நாற்றம் இங்கு வீசும்.

அவர்களுக்கும் தெரியும் அவர்கள் உடலில் ஒரு விதமான துர்நாற்றம் வெளிவருவது, அதனை மறைக்க என்னென்னமோ முயற்சி செய்வார்கள், வாசனை திரவியம் அடித்து நாற்றத்தை மாற்றிவிடலாம் என யோசிப்பார்கள் அது கதையை இன்னும் மோசமாக்கி விட்டுவிடும். இப்படி மறைக்க நினைப்பவர்கள் இந்த உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது என ஆராய்வதில்லை.

* ஓர் ஆய்வின் படி உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து புரோட்டினின் அளவை அதிகமாக்கும் போது உடலில் துர்நாற்றமடிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த ஆய்வில் கீட்டோன்கள் அதிகமாக வெளியேற்றப்பட்டு, இதனால் உடல் துர்நாற்றத்தை மட்டுமின்றி, சிறுநீர் துர்நாற்றமும் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. எனவே கார்போஹைட்ரேட் உணவை அதிகமாக எடுத்தல் நல்லது.

* மலச்சிக்கல் உள்ளவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். இவர்களின் உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவை சருமத்துளைகளின் வழியே வெளியேறும், இதனால் துர்நாற்றம் வீசும்.

* மாட்டிறைச்சி உடல் துர்நாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது செரிமானம் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதனால் உடலில் இருந்து வாயு வெளியேறி, துர்நற்றம் வரும். அதுமட்டுமின்றி, மாட்டிறைச்சியில் உள்ள அமினோ ஆசிட், சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும் போது, அது கெட்ட துர்நாற்றத்தை வீசும்.

* சர்க்கரை நோயுள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைபாடு உள்ளதால் கொழுப்புக்கள் உடைக்கப்படுகிறது. இப்படி உடைக்கும் போது அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

* ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தாலும், உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும்.

* மன அழுத்தத்தினால் வெளிவரும் வியர்வையில் துர்நாற்றம் அடிக்கும் ஏனெனில் இந்த வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியில் இருந்து சுரக்கும்.

 

 

நன்றி : வெப்துனியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.