Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும்...

வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும் | இராமச்சந்திரன் நிர்மலன்

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட...

இன அழிப்பின் உபாயமே காணாமல் போகச் செய்யப்படுதல் | கவிஞர் தீபச்செல்வன்

போர் முடிந்து விட்டது தானே, அத்துடன் எல்லாம் சரியாகிவிட்டது என்ற தொனியில்...

அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? | கவிஞர் தீபச்செல்வன்

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது...

வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி!!

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்."

இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் தீபச்செல்வன்

இலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம்...

ஆசிரியர்

தமிழரின் வரலாற்றிற்கும் பண்பாட்டிற்கும் புதியமுகவரியே சிவபூமி: ப. புஷ்பரட்ணம்

பழமையும் பெருமையும் கொண்ட ஈழத்தை சிவபூமி என்கிறார் திருமூலர். தமிழர்களின் வரலாற்றினதும், பண்பாட்டினதும் புதிய முகமாக சிவபூமி அமையும் என்று கட்டியம் கூறுகின்றது தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை மூத்த பேராசிரியர் பரமு புஷ்பரட்ணத்தின் இக் கட்டுரை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டுரையாக இது அமைகிறது. வணக்கம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இக் கட்டுரையை பிரசுரிப்பதில் பெருமையும் உவகையும் கொள்கிறோம்.ஆசிரியர்.

யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படும் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத்தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன்.  இவ்வருங்காட்சியகத்தின் மூலம் எம் சந்ததியினரால் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்து வரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது.

மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட இவ்வரும்பொருள்  காட்சியகத்தில் வடஇலங்கை மக்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்கள், மரபுரிமைச் சின்னங்கள், பயன்பாட்டிலிருந்து மறைந்து போகும் பாரம்பரிய பாவனைப் பொருட்கள், தமிழ் மக்களின் கடந்தகால வரலாற்றையும்,பண்பாட்டையும்  வெளிச்சம் போட்டுக்காட்டும் புகைப்படங்கள், ஓவியங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவற்றைப் பார்வையிடுவோருக்கு  எமது சந்ததியினர்  எங்கிருந்து வந்தார்கள், எங்கே போகின்றார்கள்,  எங்கே போக வேண்டும் போன்ற கேள்விகளுக்கெல்லாம்  விடைகாண வழிபிறந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் தமிழ் மக்களின் விலைமதிக்கமுடியாத சொத்து மட்டுமல்லாமல் அதை தூரநோக்குடன் கடின உழைப்பால் உருவாக்கித் தந்த கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சொத்தாகும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஒரு முழுமையான அருங்காட்சியகம் வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகாலக் கனவாகும். 1971 இல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கந்தரோடையில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த  பல நூற்றுக்கணக்கான தொல்பொருட்ச் சின்னங்கள்வெளிவந்தன. அவற்றைப் பார்வையிட்ட  அன்றைய அரச அதிபர் போல் பீரிஸ் அநுராதபுரத்திற்கு அடுத்த புராதன நகரம் கந்தரோடை எனக் குறிப்பிட்டு இம்மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க தமிழர் ஒருவரைத் தொல்லியல் ஆணையாளராக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 1940 ஆம் ஆண்டுக்குரிய பிரித்தானியர் கால ஆவணத்தில் சாவகச்சேரி பழைய நீதிமன்றத்தின் கீழ் புதையுண்டிருந்த புராதன ஆலயத்தின் அழிபாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திக் காட்டியது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டெழுந்த பத்திரிகைள், தமிழர்களின் மரபுரிமைகள் கவனிப்பாரின்றி அழிவடைந்து வருகின்றன.

பணத்திற்காக அவை பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன  என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவற்றைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டன.  இந்நிலையில் 1970 களில் பேராசிரியர் கா.இந்திரபாலா, வி.சிவசாமி, திரு.ஆ.சிவனேசச்செல்வன் ஆகியோரின் முயற்சியால் யாழ்ப்பாணத் தொல்லியற்கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அவ்வமைப்பில் ஆர்வத்துடன் இணைந்து கொண்ட ஆசிரியர்களான பொன்னம்பலம், திருவள்ளுவர், நிலஅளவையாளர் சேயோன், பூநகரி உதவி அரசாங்க அதிபர் கிருஷ்ணமூர்த்தி, கலைஞானி, குரும்பசிட்டி கனகரட்ணம் போன்ற பெரியவர்கள் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிவதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வத்துடன் பணியாற்றினர் அவர்களின் கண்டுபிடிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழக மட்டத்திலும் சில ஆய்வூகள் வெளிவந்துள்ளன.

ஆயினும் மரபுரிமைச் சின்னங்களைச் சேகரித்த பலர் இன்று அமரத்துவம் அடைந்து விட்ட நிலையில் அம்மரபுரிமைச் சின்னங்களுக்கு என்ன நடந்ததென்பதை யாருமே அறிந்திருப்பதாகத்   தெரியவில்லை. 2009 க்குப் பின்னர்  முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு வடஇலங்கை மரபுரிமைச் சின்னங்கள் தென்னிலங்கைக்கும், பிற நாடுகளுக்கும் கடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 2010-2011 காலப்பகுதியில் தென்னிலங்கை வர்த்தகர்கள் தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்து வீடுவீடாகச் சென்று குறைந்த விலையில் மரபுரிமைச் சின்னங்களைக் கொள்வனவு செய்த சம்பவங்களும் உண்டு. அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் இன்றும் அநுராதபுரம், பொலநறுவை, கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் உள்ள கடைகளில் வெளிநாட்டவருக்கு உரிய விற்பனைப் பொருட்களாக உள்ளன.

கடந்த வாரத்தில் வட இலங்கையில் இருந்து அமெரிக்காவூக்கு கடத்தப்பட இருந்த இரு கோடி ரூபா பெறுமதியான மரபுரிமைச் சின்னங்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இவ்வாறு எமது இனத்தின் மூலவேர், இன, மத அடையாளங்கள், பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்கள் எம்கண் முன்னேயே கடத்தப்பட்டும், அழிவடைந்தும் வருவதை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கெல்லாம் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியிடம் கையளிப்பதற்கான அருங்காட்சியகங்கள் இல்லாதிருப்பதுமே முக்கிய காரணங்களாகும். இவற்றைச் செய்து கொடுக்க அரச அமைப்புக்களோ, பொது நிறுவனங்களோ முன்வரவில்லை.

தென்னிலங்கையைப் போல் இங்குள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இவற்றைச் செய்வதில் அதிக அக்கறை காட்டி வருவதாகவும் தெரியவில்லை. இதனால் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து எமது மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது. ஆயினும் தற்போது அந்தக் கனவுக்கு சிவன் அருள் கிடைத்து விட்டது. அது தனி மனிதனாக இருந்து அல்லும் பகலும் உழைத்த கலாநிதி ஆர் .திருமுருகன் வடிவத்தில் கைகூடியுள்ளது. அதுவே நாவற்குழியில் தலைநிமிர்ந்து நிற்கும் சிவபூமி அரும்பொருள் காட்சியகமாகும்.

அரும்பொருள் காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பது கலாநிதி ஆர்.திருமுருகன் அவர்களின் திடீர் கனவு அல்ல. அவர் துர்க்கையம்மன் ஆலயத் தலைவராக பதவியேற்ற காலத்தில் இருந்து எமது மரபுரிமைச் சின்னங்களைச் சிறுகச் சிறுக சேமித்து வந்ததை நான் அறிவேன். அவை வலிகாமத்தில் மூன்று இடங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆயினும் அதற்கொரு அருங்காட்சியகம் தோன்றும் என நான் கனவு காணவில்லை. அதனால் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்து அம்மரபுரிமைச் சின்னங்களை எமது தொல்லியல் இறுதி வருட மாணவியூடாக  ஆவணப்படுத்தி வைத்துள்ளோம். அது தனியொரு நூலாகவூம்  விரைவில் வெளிவரவுள்ளது. அப்போது சிவபூமி அரும்பொருள் காட்சியகம் தோன்றிய வரலாற்றுப் பின்னணியும் தெரியவரும்.

இன்றைய உலகில் நேரம், பணச் செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு நாட்டின் அல்லது ஒரு இனத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு அங்குள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர். தற்போது தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு புதிய வழி திறக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பரப்பில் மூன்று தளங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும்பொருள் காட்சியகத்தின் கட்டிட அமைப்பு, காட்சிப்படுத்தலில் பின்பற்றப்பட்டுள்ள ஒழுங்குமுறை, காட்சிப்படுத்தப்பட்டு வரும்  வரலாற்றுச் சின்னங்கள், சிலைகள், சிற்பங்கள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், அவை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் என்பன அருங்காட்சியகத்தைப் பார்க்க வருபவர்களுக்கு இதுவரை தெரிந்திருக்காத தமிழர் பற்றிய புதிய வரலாற்றுச் செய்திகளை சொல்லப் போகின்றன.

அவற்றுள் திறந்த வெளி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மன்னர்களின் சிலைகள் பலரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. இதுவரை எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்ற தமிழ் மன்னர்களுக்கே சிலை வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தில் நல்லுரைத் தலைநகராகக் கொண்டு 350 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த 21 தமிழ் மன்னர்களுக்குச் சிலைகள் வைக்கப்படவில்லை. அக்குறைபாட்டைப் போக்கும் வகையில் முதன் முறையாக  சிவபூமி திறந்தவெளி அருங்காட்சியகத்தில் 21 மன்னர்களுக்கும்  கடவுளருக்கு அடுத்த நிலையில் பீடங்கள் அமைத்து அவற்றின் மேல் மன்னர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அவற்றின் கீழ் ஆட்சியாண்டுகள் பொறிக்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆர்வலகர்களுக்கு மனமகிழ்வை அளிப்பதாக உள்ளது.

கடந்த இருவாரங்களாக முகநூல்களில் பகிரப்பட்ட செய்திகளில் சிவபூமி அருங்காட்சியகம் பற்றிய செய்திகளே அதிக அளவில் ஆக்கிரமிப்புச்  செய்தியாகக் காணப்படுகின்றன. இது தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதன் பிரதிபலிப்பாகும். இதன் சாதனைக்கும் நன்றிக்கும் உரியவர் அரசியல் கலப்பற்ற சொல்லின் செல்வர் ஆர்.திருமுருகன் அவர்கள். துடிப்புள்ள இளைஞராக ஆன்மீகப் பணியில் ஈடுபட்ட அவர் படிப்படியாக சமூகப் பணியில் அகலக் கால்பதித்து சாதனை படைத்து வரும் ஒருவர். பலர் சிந்திக்க முன்னரே செயலில் காட்டி பிறரைப் புதிதாகச் சிந்திக்கத் தூண்டியவர்.

இதற்கு தனிமனிதனாக இருந்து கிழக்கிலங்கை வரை இன்று வியாபித்துள்ள அனாதைச் சிறுவர்களுக்கான கல்விக்கூடம், விழிப்புணர்வற்றவர்களுக்கான காப்பகம், வயோதிபர் மடம், நாய்களுக்கான காப்பகம் முதலான அவரது பணிகள் கட்டியம் கூறி நிற்கின்றன. தூரநோக்குடன் நாவற்குழியில் அவர் உருவாக்கிய திவாசக அரண்மனை இலங்கை வரும் ஆன்மீகவாதிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் யாழ்ப்பாணத்தை திரும்பி பார்க்க வைத்தது. இன்று அதற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும்பொருள் காட்சியகம் தமிழர் பண்பாட்டை மேலும் தலைநிமிரச் செய்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் நாவற்குழி என அடையாளப்படுத்தப்படும் பெயர் விரைவில் யாழ்ப்பாண இராசதானியின் நுழைவாயில் என அழைக்கப்படுவதற்கு இவ்வருங்காட்சியம் வழிவகுக்கலாம்..

பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்.

கட்டுரையாளர், ஈழத்தின் குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வாளர் மாற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  வரலாற்றுத்துறைத் தலைவர் ஆவார். 

 

இதையும் படிங்க

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலின் அக்கரை போனோரே.. | முருகபூபதி

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும்...

‘விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்… ஆனால்?’ | முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

விஜய் சேதுபதி, முத்தையா முரளீதரன் வருண்.நா இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா...

எஸ்.பி.பி எதிர்கொண்ட கொரோனா ஆபத்துக்கள் ட்ரம்பிற்கும் உண்டா?

கொரோனா தொற்று காரணமாக அண்மையில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இந்திய மக்களால் மாத்திரமின்றி உலகத் தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படட பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றின் காரணமாக...

திலீபனின் போராட்டத்தை திரிபுபடுத்தும் டக்ளஸ் | கார்வண்ணன்

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள்,   விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள் பரவலான கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

இளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்

அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...

தொடர்புச் செய்திகள்

ஈழம் இன்று நேற்று தோன்றிய பெயரல்ல! தீபச்செல்வன்

ஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு...

ஈழ சினிமா அடையாளங்களை திசைமாற்ற அரச ஆதரவாளர்கள் திட்டம்!

ஈழ சினிமாவின் தனித்துவ அடையாளங்களை அழிக்கும் வகையில், இலங்கை அரசின் ஆதரவாளர்கள் சிலர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் ஈழ சினிமா தனித்துவமான முறையில் இயங்கி வருகின்றது. சிறந்த குறும்படங்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை சிங்கள சினிமாவுக்கு சவால் விடும் வகையில் தரமான...

தன்பெயரை தருமம் செய்த ஆரையம்பதி | பிரசாத் சொக்கலிங்கம்

இடங்களைக் குறிக்கும் பெயர்கள், அந்த இடத்தின் வரலாறு, மொழி, மானிடவியல், பண்பாடு, நாட்டார் வழக்கியல் போன்றவற்றிக்கான ஆய்வு மூலங்களில் பெறுமதியான பங்களிப்பை வழங்குவனவாகும். மூதாதையர்கள், அவர்களின் சமூக நடைமுறைகள், சடங்குகள், மரபுகள், நிர்வாக ஒழுங்குகள்,...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

4 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் கடந்தது. இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மௌனம் காக்கவில்லை | ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான  முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர்...

யாழ் – கொழும்பு உள்ளி்ட்ட 6 பேருந்துகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் இதுவரையில், கொரோனா தொற்றாளர்கள் பயணித்த ஆறு பேருந்துகள் இனங்காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற...

பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தலைமைகளுக்குத் தேவை புதிய அணுகுமுறை | சுரேன் ராகவன்

• 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது • 20இல் உரிய திருத்தங்கள் செய்யப்படும் இனக்குழுமங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக...

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு