Thursday, October 22, 2020

இதையும் படிங்க

தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும்...

வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும் | இராமச்சந்திரன் நிர்மலன்

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட...

இன அழிப்பின் உபாயமே காணாமல் போகச் செய்யப்படுதல் | கவிஞர் தீபச்செல்வன்

போர் முடிந்து விட்டது தானே, அத்துடன் எல்லாம் சரியாகிவிட்டது என்ற தொனியில்...

அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? | கவிஞர் தீபச்செல்வன்

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது...

வாஜ்பாயும் நல்லக் கண்ணும் | இன்று அவர் தேசபக்தர்… இவர் தேச விரோதி!!

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்."

இரு தேசங்கள்! இரு அபிலாசைகள்!! | ஜூனியர் விகடனில் தீபச்செல்வன்

இலங்கையில் நடந்த தேர்தல் இரு தேசங்களை, இரு அபிலாசைகளை தெளிவுபடுத்தியிருப்பதாக ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரையில் அதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டுரையை முழுமையாக தருகிறது வணக்கம்...

ஆசிரியர்

தமிழ் தேசிய கீதம்தான் தமிழீழத்தை உருவாக்குமா? தீபச்செல்வன்

 தேசிய கீதம்? தமிழீழம்?க்கான பட முடிவுகள்

இலங்கைத்தீவில் தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடுவதற்கு தமிழ்மொழிப் புறக்கணிப்பு முக்கியமான காரணம். 1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டம், ஈழத் தமிழ் மக்களை மிகவும் கடுமையாக பாதித்தது. முழு இலங்கைத் தீவையும் சிங்களத் தீவாக்க முயன்றபோதே ஈழ மக்கள் தனி ஈழத்திற்கான போராட்டத்தை துவங்கினார்கள். அன்று சிங்களர்கள் மத்தியில் நிலவிய தனிச் சிங்கள மனநிலை இன்றும் காணப்படுகின்றது என்பதுதான் அதிர்ச்சி.

அண்மையில் இலங்கையில் சுதந்திர தினம் நடந்தது. இதில் தமிழிலில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று சிங்கள இனவாத அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள். அதற்கு இலங்கையின் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் மறைமுகமான ஆதரவை வழங்கினார்கள். மீண்டும் தனிச் சிங்கள நடைமுறையை கையில் எடுக்கும் இவர்கள் இதன் ஆபத்துக்களை அறியாதவர்களல்ல.

இலங்கை 1948இல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. 1949இல் நடந்த முதல் சுதந்திர தினத்தில் முதன் முதலில் தமிழில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அன்றைய பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா, தமிழ் தேசிய கீதத்துடன் முதல் சுதந்திரதின நிகழ்வை துவங்கினார் என்பது மிகவும் முக்கியத்துவம் உடைய வரலாறு.

அப்படி முதன் முதலில் தமிழிலில் தேசிய கீதம் இசைக்க என்ன காரணம்? அந்நியரின் வருகைக்கு முன்னர் வெவ்வேறு ராஜ்ஜியங்களாக ஈழம் காணப்பட்டபோதும் பிரித்தானியரை வெளியேற்றுவதில் சிலோனாக தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள். அத்துடன் இலங்கையின் சுதந்திரத்திலும் ஈழ மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இன்றைய சிலோனின் முகமாக ஈழத் தமிழ் மக்களே இருந்தார்கள். இதனால்தான் தமிழுக்கு அந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சிங்கள தேசிய கீதத்துடன் தமிழ் தேசிய கீதமும் பயன்பாட்டில் இருந்து வந்தது. தமிழ் மொழியிலான பாடப் புத்தகங்களில் எல்லாம் அன்றிலிருந்து இன்றளவும் தமிழில்தான் தேசிய கீதம் இடம்பெற்றிருக்கிறது.

தனிச்சிங்கள சட்டம், இன உரிமை மறுப்பு, இன அழிப்பு முதலிய காரணங்களுக்காக தனிநாடு கோரி போராடிய தமிழர்கள், சிங்கள தேசிய கீதத்தை மாத்திரமல்ல, தமிழ் மொழிபெயர்ப்பையும் புறக்கணித்தார்கள். அதில் ஈழ மக்களுக்கு துளியளவும் ஈடுபாடு இல்லை.

இந்த நிலையில், கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த மைத்திரிபாலா சிறிசேனா அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாடுகின்ற நடைமுறையை கொண்டுவந்தது. அதற்கு அப்போதே ராஜபக்ச தரப்பினர் எதிர்த்து வந்தனர். இன்றைக்கு அமைச்சராக இருக்கின்ற விமல் வீரவன்ச என்பவர், தமிழில் தேசிய கீதம் படித்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கனவான தமிழீழம் உருவாகிவிடும் என்று கூறியிருக்கிறார். எதற்கெடுத்தாலும் பிரபாகரனின் கனவு நனவாகிவிடும், தமிழீழம் உருவாகிவிடும் என்பதுதான் அமைச்சர் விமலின் பேச்சு.

புதிதாக பதவியேற்ற அதிபர் கோத்தபாயா, வடக்கு கிழக்கில் தமிழுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பேசினார். பொலிஸ் நிலையங்கள் எனப் பெயரிடாமல், காவல் நிலையங்கள் என்று பெயரிட வேண்டும் என்றும் சொன்னார். ஆனால் அவரும் தமிழ் தேசிய கீதத்தை ஒழித்தழிப்பதில் மிகவும் அக்கறையுடன் உள்ளார்.

இந்தியாவில் ஒரு தேசிய கீதம், சிங்கப்பூரில் ஒரு தேசிய கீதம் என்கிறார்கள் ராஜபக்சேவினர். இந்தியாவில் வங்கமொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். ஆனால் சிறுபான்மை மொழியான மலாயில்தான் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அத்துடன் பல நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் உள்ளன.

வரலாறு முழுவதும் தமிழ் மொழியையும் இனத்தையும் புறக்கணித்து, தமிழீழத்திற்கு தள்ளியது சிங்களப் பேரினவாதிகளே. இப்போது தமிழ் தேசிய கீதம் இல்லை என்பதன் மூலம், தமிழர்கள் தமக்கான நாட்டையும் தேசிய கீகத்தையும் உருவாக்குகின்ற நிலைமையைதான் சிங்கள இனவாதிகள் ஏற்படுத்துகின்றனர். இலங்கை சுதந்திர தினம் என்பது சிங்களர்களுக்குத்தான், தமிழர்களுக்கு அது அடிமை  தினம் என்பதையே அன்று தொடக்கம் இன்றுவரை உணர்த்த முற்படுகிறது சிங்கள தேசம்.

நன்றி- குமுதம்

இதையும் படிங்க

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலின் அக்கரை போனோரே.. | முருகபூபதி

மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும்...

‘விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்… ஆனால்?’ | முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

விஜய் சேதுபதி, முத்தையா முரளீதரன் வருண்.நா இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா...

எஸ்.பி.பி எதிர்கொண்ட கொரோனா ஆபத்துக்கள் ட்ரம்பிற்கும் உண்டா?

கொரோனா தொற்று காரணமாக அண்மையில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இந்திய மக்களால் மாத்திரமின்றி உலகத் தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படட பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றின் காரணமாக...

திலீபனின் போராட்டத்தை திரிபுபடுத்தும் டக்ளஸ் | கார்வண்ணன்

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள்,   விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள் பரவலான கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

இளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்

அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...

தொடர்புச் செய்திகள்

தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும்...

ஈழம் இன்று நேற்று தோன்றிய பெயரல்ல! தீபச்செல்வன்

ஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு...

தமிழர்கள் தனிநாடு கோரினால் வடக்கு, கிழக் கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் கொந்தளிப்பு

சமஷ்டி என்றால் அது பிரிவினை, தனிநாடுதான். தமிழர்கள் அதை மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என பொதுபலசேனா...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இரண்டு முறை சுப்பர் ஓவரில் திகில் | மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மேலும் பதிவுகள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம்

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் | அரசாங்கம்

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா, டயகமவில் இன்று...

ஒரு விமானியின் கதை | ஆஷா – ஆதம் ஹாரியாக மாறிய திருநம்பி

எப்படியாவது ஒரு தொழில் முறை பைலட்(Commercial Pilot) ஆகிய வேண்டும் என்ற அவரது லட்சியம் முடங்கி விடும் என்ற எண்ணம் வந்தது அவருக்கு.. Commercial...

படை பலத்தை அதிகரிக்கும் சீனா | தாய்வானுக்கு அச்சுறுத்தலா?

தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து...

மினுவங்கொட கொரோனா கொத்தணி | இன்றும் நூறு பேருக்கு மேல் தொற்று!

நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம்...

இந்தியப் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள கூட்டமைப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமருடனான...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

துயர் பகிர்வு