நோர்வேயில் வதியும் சுமார் 5000 பெற்றோர்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள். கடந்தகாலங்களில் நோர்வேயில் பெற்றோர்களிடமிருந்து சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பிரித்து காப்பகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பக்குவம் அடையாத இச் சிறு வயதில் இத்தகைய நடவடிக்கைகளால் குழந்தைகள் மன உளைச்சளுக்குள்ளாவதுடன் பெற்றோர்களும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகிய நோர்வேயில் வதியும் இரு தாய்மார் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் டொம் தேவாலயத்தில் 10 நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிதரப்போராட்டத்தின் அடுத்த உச்சகட்ட போராட்டமாகவே இன்று நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
சிறுவர் நலன் பேணும் அமைப்புகள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் ஓன்று சேர்ந்து இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளார்கள். இதில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உலகின் பார்வையை இவ்விடையம் தொடர்பாக திருப்பவும் தமக்கு நீதி கிடைக்கவும் தாம் தம் குழந்தைகளுடன் சேர்ந்து வாழவும் இவ் கண்டன ஆர்ப்பாட்டம் அமையுமென பெற்றோர்கள் எதிர்பாக்கின்றார்கள்.
இன்று ஐரோப்பிய நேரம் மாலை 5.30 தொடக்கி இரவு 8.30 வரை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறும்.