பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை

பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போரை தேடி கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை எச்சரித்து வெளியிடப்பட்டிருந்த சுவரொட்டிகளை அடுத்தே அதிகாரிகள் இந்த தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த தேடுதல்களை அடிப்படை சுதந்திரத்தை மீறும் வன்முறை செயல்கள் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பெர்ரி காடினர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, சட்டவிரோதமாக தங்கியிருந்த  ஐந்து இலங்கையர்கள் உட்பட இந்தியன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரித்தானிய தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பழமைவாத கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின் குடிவரவுக் கொள்கையில் கடும்போக்கினை கடைப்பிடித்து வருகின்றது. டேவிட் கமேரோனின் ஆட்சியில் அதிகமான இலங்கையர் நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்