Tuesday, September 29, 2020

இதையும் படிங்க

இலங்கையில் இனவாத ஆட்டம் ஆரம்பம் | தாயகன்

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா...

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்

தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...

எதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்

”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க  எழுத்தாளர்

இலங்கையில் கல்வியில் சமத்துவம் பேணப்படுகின்றதா? | இராமச்சந்திரன் நிர்மலன்

  உலக வரலாறுகளில் கல்வி எப்போதும் சமத்துவமாக இருந்ததில்லை. உயர் சமூக அடுக்கமைவுகளைச் சார்ந்தோருக்கும், மதரீதியாகவும், இனரீதியுமாகவே கல்வி வழங்கப்பட்டு வந்து இருக்கின்றது. குருகுலக்காலத்தில் சாதாரண மக்களுக்கு கல்வி என்பது எப்போதும் விலக்களிக்கப்பட்டது தான்....

இலங்கையில் இணையவழிக்கல்வியிலுள்ள  சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக...

புனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்

  அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ;...

ஆசிரியர்

தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்: நிலாந்தன்

Barack Obama

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவது என்றால் என்ன?

தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படையில் மேற்படி மூன்று தரப்புக்களிடமும் என்ன உண்டு பார்க்கலாம்.

Nilanthanஅதற்கு முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கான அடிப்படை நிபந்தனை எதுவென்று பார்க்கலாம். அதாவது சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் கூர்முனையை மழுங்க செய்ய வேண்டும். அல்லது ஒரு தீர்வை நோக்கி அதைக் கனிய வைக்க வேண்டும். அல்லது வளைக்க வேண்டும். இதன்படி பார்த்தால் பெருந் தேசியவாதத்தை ஒன்றில் தோற்கடிக்க வேண்டும். அல்லது அதைக் கனிய வைக்க வேண்டும்.அவ்வாறு பெருந் தேசியவாதத்தை கனிய வைக்கத் தக்க வேட்பாளர்கள் யாராவது மேற்படி மூன்று தரப்புகளில் உண்டா?
இல்லை. இதைச் சற்று விரிவாக பார்க்கலாம்.

ராஜபக்ச அணி ஒப்பீட்டளவில் வெளிப்படையாக காணப்படுகிறது. சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின் இனவாதக் கூர்முனையின் ஆகப் பிந்திய வளர்ச்சியாகிய யுத்த வெற்றி வாதத்திற்கு அந்த அணி தலைமை தாங்குகிறது.யுத்த வெற்றி வாதம் எனப்படுவது யுத்தத்தில் வெற்றி பெற்ற தரப்பை தொடர்ந்தும் வெற்றி பெற்ற தரப்பாகவே பேணுவது. இதை மறு வளமாக சொன்னால் தோல்வியுற்ற தரப்பைத் தொடர்ந்தும் தோல்வியுற்ற தப்பாகவே பேணுவது. எனவே இதில் தோல்வியுற்ற தரப்புக்கு வெற்றியாகக் கருதத்தக்க எந்த ஒரு தீர்வும் வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ச சகோதரர்கள் தெளிவாக கூறுகிறார்கள் அபிவிருத்தி தான் ஒரே தீர்வு என்று. முஸ்லீம் அரசியல்வாதிகளைப் போல தமிழ் மக்களும் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாறவேண்டும் என்று கோத்தபாய கூறுகிறார். அரசியல் தீர்வு விவகாரத்தை தனது தமையன் பார்த்துக்கொள்வார் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணிக்குள் இருந்து வரும் செய்திகளைத் தொகுக்கும் போது பதின்மூன்றாவது திருத்தத்தை அவர்கள் தாண்ட மாட்டார்கள் என்று தெரிகிறது.

இரண்டாவது தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தரப்பு கூட்டமைப்போடு சேர்ந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. புதிய யாப்பினுள் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அத் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்கலாம் எற்காமல் விடலாம். எனினும் ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டுமென்று இத்தரப்பு சிந்தித்தது. அதன் யாப்புருவாக்க முயற்சிகள் விசுவாசமாக மேற்கொள்ளப்படாதவைகளாக இருக்கலாம். எனினும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கான ஏதோ ஒரு முயற்சியை மேற்கொண்ட ஒரு தரப்பாக இத்தரப்பு காணப்படுகிறது.

மூன்றாவது தரப்பு ஜேவிபி. இவர்களிடம் தீர்வு இல்லை. கடந்த வாரம் காலிமுகத்திடலில் லட்சக்கணக்கானவர்களை கூட்ட முடிந்த ஒரு கட்சியிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவும் இருக்கவில்லை. அக்கட்சியின் வேட்பாளராகிய அனுர குமார திசாநாயக்க தனது உரையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாகவே வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் அவர் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. ராஜபக்சக்கள் கூறுவதைப் போலவே இத்தரப்பும் பாதுகாப்பைப் பற்றியும் அபிவிருதியைப் பற்றியுமே பேசுகிறது.

மேற்கண்ட மூன்று தரப்புகளின் நிலைப்பாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் மூன்று தரப்புமே இனவாதத்தை செங்குத்தாக எதிர்க்கத் தயாரில்லை. இனவாத்தோடு மோதத் தயாரில்லை. ஒரு தரப்பு இனவாதத்தின் பிந்திய வளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறது. இன்னொரு தரப்பு இனவாதத்தோடு கள்ளப்பெண்டாட்டி உறவைப் பேணுகிறது. இனப்பிரச்சினை என்ற ஒன்று இருப்பதாக கூறாமல் விடுவதன் மூலம் அது இனவாதத்தைப் பகைத்துக் கொள்ளத் தயாரில்லை. ஒப்பீட்டளவில் ரணிலின் தரப்பு இனவாதத்தோடு ஏதோ ஒரு சுதாகரிப்பை செய்து கொண்டு ஒரு தீர்வைப் பெற்றுவிட முயற்சிக்கிறது. ஆனால் அப்படி ஒரு தீர்வைப் பெறுவதற்காக தமிழ் மக்களோடு வெளிப்படையாக ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள அந்தத் தரப்பும் தயாரில்லை.

2009 இற்குப் பின் வந்த ஜனாதிபதித் தேர்தல்கள் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை. இப்பொழுதும் இதுதான் நிலைமை. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் பொருட்டு தமிழத் தரப்போடு உடன்படிக்கை செய்ய முடியாத ஒரு நிலை. அப்படி ஓர் உடன்படிக்கையை எந்தத் தரப்பு செய்கிறதோ அது இனவாத வாக்குகளை கூடியபட்சம் பெற முடியாது என்ற நிலை.

இப்படிப்பட்ட ஓர் அரசியர் சூழலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கலாம? யாரை முழுமையாக நம்பலாம்?

யாரையும் முழுமையாக நம்ப முடியாது. காதலிக்கவும் முடியாது. கையாளக்கூடிய தரப்புக்களைக் கையாளளாம். இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டு என்று ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வை முன்வைப்பதற்காக இனவாதத்த்தோடு வெளிப்படையாக பேசவும் வெளிப்படையாக முரண்படவும் தயாராக உள்ள ஒரு தரப்புதான் தமிழ் மக்களுக்கு உண்மையான நட்பு சக்தி. ஆனால் அப்படிப்பட்ட நட்பு சக்திகள் தென்னிலங்கையில் மிகச்சிலவே உண்டு. அவை பலமற்றவை. சிங்கள மக்கள் மத்தியில் பெருந்திரள் வெகுசன அரசியலை முன்னெடுக்க முடியாதவை. பெருமளவிற்கு நீதியின் பாற்பட்ட இலட்சியவாதச் செயற்பாட்டு அமைப்புக்களே அவை.

எனவே ஒரு தீர்வுக்காக பொதுசன அபிப்பிராயத்தைக் கனிய வைப்பது என்று சொன்னால் அதற்கு வெகுஜனத் தளத்தைக் கொண்ட பெரிய கட்சிகளால்தான் முடியும். ஆனால் சிங்கள வெகு சனத்தின் ஆதரவைப் பெற விழையும் எந்த ஒரு பெரிய கட்சியும் இனவாதத்தை வெளிப்படையாகவும் நேரடியாகவும் பகைக்கத் தயாராக இருக்காது. இப்படிப் பார்த்தால் தமிழ்த் தரப்பானது எழுதப்படாத உடன்படிக்கையின் அடிப்படையில் ஏதாவது ஒரு தரப்போடு தந்திரோபாய உறவைத்தான் வைத்துக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஈழத்தமிழர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் தெரிவுகள் உண்டு.

நிச்சயமாக இத் தெரிவுகளுக்குள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற தெரிவு வராது. ஏனெனில் தமது பேரத்தை தக்க வைக்கவும் தமது மக்கள் ஆணையை வெளிப்படுத்தவும். சிங்கள அரசியல்வாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் தனது தரப்பு நியாயத்தை கூர்மையாக வெளிப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு இப்போது உள்ள ஒரே பிரயோக வழி தேர்தல் வழிமுறைதான். ஏனெனில் தமிழ் மக்களிடம் அதற்கு வெளியே வெகுசன அரசியலை முன்னெடுக்கவல்ல மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது.

ஆனால் தமிழ் மக்கள் தமது பேர அரசியலை முன்னெடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. யுத்த வெற்றி வாதமானது தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை தொடர்ந்தும் தோல்வியுற்ற நிலையிலேயே பேண முயற்சிக்கும். ஆனால் 2009 க்குப் பின்னரான இந்தோ பசிபிக் பிராந்திய இழுவிசைகளின்படி தமிழ் மக்களுக்குப் பேரம் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் பேரத்தைச் சிறப்பாகக் கையாண்டு அரசியல் வலுச் சமநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற வேண்டிய தேவை கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே அவ்வாறு கிடைத்திருக்கும் பேரத்தை கையாண்டு வலுச் சமநிலையை மாற்றுவதற்கு கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். அதில் தேர்தல் ஒரு முக்கிய வாய்ப்பு. எனவே தேர்தலைப் புறக்கணித்தல் என்ற தெரிவுக்கு இடமில்லை. இதன்படி தமிழ் மக்களுக்கு பின்வரும் தெரிவுகள் உண்டு.

முதலாவது தெரிவு – ஏற்கனவே ஒரு தீர்வு முயற்சியில் ஈடுபட்ட தரப்போடு இணைந்து எதிர்த்தரப்பைத் தோற்கடித்து தீர்வு முயற்சிகளை தடையின்றி முன்னெடுப்பது.
இரண்டாவது தெரிவு – ஒரு தமிழ் வேட்ப்பாளரை முன்னிறுத்தி இரண்டு பிரதான வேட்ப்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்களைக் குழப்புவது.
மூன்றாவது தெரிவு – ஜெ.வி.பிக்குமுதலாவது விருப்பத் தெரிவு வாக்கையளிப்பது. இரண்டாவது விருப்பு வாக்கை பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வழங்குவது.

இதில் முதலாவது தெரிவைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டமைப்பு தெரிந்தெடுத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. கிடைத்ததெல்லாம் கம்பெரலியதான். அதாவது ரணில் ஒப்பீட்டளவில் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்கிறார். அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக எதையோ முயற்சித்திருக்கிறார். ஆனால் தீர்வு முயற்சிகள் யாவும் முடிவில் தேங்கிப் போய் விட்டன. அதன் விளைவாக தீர்வு பற்றி பேசுவதை விட்டு விட்டு ரணிலும் கூட்டமைப்பும் கம்பெரலிய பற்றி பேசி வருகின்றன. அதாவது பிரயோகத்தில் ரணிலும் அபிவிருத்தி அரசியலைதான் முன்னெடுக்கிறார். ராஜபக்ச கூறுவதைப் போல, ஜே.வி.பி கூறுவதைப் போல.

இரண்டாவது தெரிவு – மு.திருநாவுக்கரசு முன்வைத்தது. தமிழ் மக்கள் திட்டமிட்டுச் செயற்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மேலௌ முடியும் என்று மு.திருநாவுக்கரசு கடந்த பத்து ஆண்டுகளாக கூறிவருகிறார். 2010இல் அவர் “பொங்கு தமிழ்”. இணையத்தளத்தில் வேறு பெயரில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதே விடயத்தை 2015ம் அதே இணையதளத்தில் சிறிய மாற்றங்களோடு எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதியதை முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் யாருமே பொருட்படுத்தவில்லை. மாறாக 2010இல் தமிழ் தலைவர்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள். 2015 மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்தார்கள். இப்பொழுது யாரை ஆதரிக்க போகிறார்கள்?

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழலாம் என்பதைக் குறித்து திருநாவுக்கரசு கூறியதை பார்க்கலாம். தமிழ் மக்கள் ஒரு பொதுத் தமிழ் வேட்ப்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும். எல்லாத் தமிழ் வாக்குகளும் அந்த வேட்பாளருக்கு விழும்போது இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது கடினமாகும். அதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்கு போக வேண்டியிருக்கும். கணக்கெடுப்பில் தமிழ் மக்கள் யாரை இரண்டாவது விருப்பத் தெரிவாக தெரிந்தெடுக்கிறார்களோ அந்த சிங்கள வேட்பாளரே ஜனாதிபதியாக வருவார். இதுதான் திருநாவுக்கரசுவின் கணக்கு. ஆனால் கூட்டமைப்பைச் சேர்ந்த யாருமே இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை.

மூன்றாவது தெரிவு கிட்டத்தட்ட திருநாவுக்கரசு கூறும் தெரிவுக்கு நெருக்கமாக வரும் மற்றொரு தெரிவாகும். யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரான குமாரவடிவேல் குருபரன் இது தொடர்பில் என்னோடு உரையாடினார். முகநூலிலும் எழுதியுள்ளார். அதன்படி தமிழ் மக்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நிராகரித்து தமது முதலாவது விருப்பத் தெரிவை ஜேவிபிக்கு வழங்கினால் என்ன நடக்கும்? இதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியை உலகத்திற்கு உணர்த்தலாம். அதேசமயம் ஜேவிபி வெற்றி பெறப் போவதில்லை. தான் வெல்லப் போவது இல்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் அக்கட்சி களத்தில் இறங்கியிருப்பது ஏன்? ஏனெனில் அவர்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வெற்றிகளையும் குழப்ப நினைக்கிறார்கள். அதேசமயம் தமது கட்சியை ஒரு மூன்றாவது சக்தியாக கட்டியெழுப்ப விழைகிறார்கள்.

எனவே இரண்டு பிரதான கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளாத தென்னிலங்கையின் மூன்றாவது தரப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்களில் தங்கியிருக்கச் செய்யலாம். சிங்கள மக்களுக்கும் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் ஒரு செய்தி உணர்த்தலாம். ஜேவிபிக்கு விழக்கூடிய சிங்கள வாக்குகளோடு தமிழ் வாக்குகளும் கொத்தாகச் சேர்ந்தால் அது அனேகமாக இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றிகளையும் குழப்பக்கூடும். இதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்குப் போக வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்களோடு ஏதோ ஓர் உடன்படிக்கை வரத் தயாரான பிரதான வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கலாம். அதன்மூலம் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தலாம். அவ்வாறு வெற்றிபெறும் வேட்பாளர் தமிழ் மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்பட்ட வெற்றியைப் பெற்ற ஒருவராக இருப்பார். எனவே அவரோடு ஒரு பலமான பேரத்தை வைத்துக் கொள்ளலாம். இது மூன்றாவது தெரிவு.

இக்கட்டுரையானது இன்று முடிவுகள் எதையும் கூறப்போவதில்லை. மேற்படி தெரிவுகள் குறித்துத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். இவற்றை விட வேறு தெரிவுகளையும் கண்டு பிடிக்கலாம். அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. எனவே, எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் நன்கு ஆராய்ந்து ஒரு தேர்தல் வியூகத்தை வகுக்கலாம். ஜேவிபி இரண்டு பிரதான கட்சிகளையும் குழப்புவது போல தமிழ் மக்களும் தென்னிலங்கையில் இருக்கும் தப்புகளைக் குழப்பலாம். அவற்றை எப்படித் தமிழ் மக்களில் தங்கியிருக்கச் செய்யலாம் என்று சிந்திக்கலாம். அரசியலில் எதிர்த் தரப்பைக் குழப்புவது என்பதும் பேரம் பேசும் உத்திகளில் ஒன்றாகும். இது பேரத்தை உயர்த்துவதோடு வலுச் சமநிலையை தமிழ் மக்களுக்கு சாதகமாகத் திருப்ப உதவும்.

நிலாந்தன். கட்டுரையாளர், ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். 

இதையும் படிங்க

திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை | நிலாந்தன்

நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு...

திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது | நிலாந்தன்

அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில்...

இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா? | நிலாந்தன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி...

அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள் | நிலாந்தன்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது....

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி | நிலாந்தன்

இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு...

மாற்று அணிக்கு முன்னாலுள்ள பணி | நிலாந்தன்

இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக  வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து...

தொடர்புச் செய்திகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

பேரினவாதத்தை ஊக்குவிக்கும் எஸ்.பி.திசாநாயக்க

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் இன்று...

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...

அரசியலில் இருந்து விலகுவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப்...

அடேங்கப்பா! சந்திரமுகி 2 படத்தில் இந்த நடிகையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு...

மேலும் பதிவுகள்

எஸ்.பி.பி.யின் மறைவால் கலாசார உலகம் மிகவும் ஏழ்மையாகிவிட்டது | மோடி இரங்கல்

பிரபல பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்...

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துக! | கமாலுக்கு சாள்ஸ் கடிதம்

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மேலும்...

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் லட்சுமி மேனன்!

கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு  நடிகையாக அறிமுகமானவர்  லட்சுமி மேனன். இத் திரைப் படத்தினைத் தொடர்ந்து அவர்  கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, வேதாளம்,...

நடிகர் விஜயகாந்த் மனைவிக்கு கொரோனா

நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளாருமான விஜயகாந்தின்  மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனாதொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில்...

தமிழர் பண்பாடு இல்லாமல் இந்தியா முழுமையடையாது | பிரதமருக்கு கடிதம்

தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் தமிழக அறிஞர்களைக் இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள...

நாளை முதல் போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம்

பஸ் முன்னுரிமை பாதையை பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ் மற்றும் வாகனங்கள் மாத்திரமே நாளைமுதல் பயன்படுத்த முடியும்...

பிந்திய செய்திகள்

குடும்ப தகரராறில் சாம்பலாகிய வீடு

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.

சிங்கள தேரரின் பேரினவாதம்

அரசின் அடக்குமமுறைகளை கண்டித்து தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் வடக்குக் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழர் பகுதிகள் எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும்...

வெறும் 30 நாளில் உருவாகும் சிம்புவின் திரைப்படம்

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில்...

விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய...

வெந்தய குழம்பு

வெந்தயம் – 4 தேக்கரண்டி வரமிளகாய் – 4 கொத்தமல்லி – 3 தேக்கரண்டி சீரகம் –...

லேடீஸ் லிப்ஸ்ட்டிக்கிள் சிறந்த நிறம் சிவப்பே

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம்...

துயர் பகிர்வு