Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் கொடூரமான ஆர்மேனிய இனப்படுகொலை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இருபதாம் நூற்றாண்டின் கொடூரமான ஆர்மேனிய இனப்படுகொலை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

6 minutes read
 
துருக்கி ஒட்டோமான் பேரரசின் வலிந்த திட்டமிட்ட இனஅழிப்பு !
——————————————————
              – ஐங்கரன் விக்கினேஸ்வரா
( ஆர்மேனிய இனப்படுகொலையை ஏப்ரல் 24 அன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்மேனியர்கள் இறந்த தங்கள் மூதாதையர்களின் இழப்பை நினைவு கூர்ந்து மதிக்கிறார்கள். ஆர்மேனிய இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கோரமான கொடூரங்களில் ஒன்றாகும். ஒரு நூற்றாண்டு கடந்தும் அட்டூழியங்களால் ஏற்பட்ட வடுக்கள் அழுத்தமாக பதிந்துள்ளது.)
இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலையாக துருக்கியில் ஒட்டோமான் ஆட்சியில் ஆர்மேனியர்கள் மீது படுகொலை செய்யப்பட்டமை தான் வரலாற்றில் பதியப்பட்ட கோர நிகழ்வாகும்.
இந்த கொடூர சம்பவத்தை  உலகமே இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆர்மேனிய இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கோரமான கொடூரங்களில் ஒன்றாகும். ஒரு நூற்றாண்டு கடந்தும் அட்டூழியங்களால் ஏற்பட்ட வடுக்கள் அழுத்தமாக பதியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டோமான் படைகளால், திட்டமிட்ட வகையில், 15 லட்சம் ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதாக ஆர்மீனிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 24 அன்று உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்மீனியர்கள் ஆர்மேனிய இனப்படுகொலை என்று அழைக்கப்படும் பயங்கரமான நிகழ்வில் இறந்த தங்கள் மூதாதையர்களின் இழப்பை நினைவு கூர்ந்து மதிக்கிறார்கள்.
இந்த இரத்தக்களரி நிகழ்வின் பின்னர் ஆர்மேனிய இனப்படுகொலையை உலகின் பல நாடுகள் அங்கீகாரம் அளித்தாலும், ஆர்மேனிய இனப்படுகொலையை இன்னமும் பல நாடுகள் அங்கீகரிக்க தயங்குகின்றன.
ஆர்மேனிய இன அழிப்பு:
ஆர்மேனிய இனப்படுகொலை அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு (Armenian Genocide) என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்களை வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது.
பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப் பகுதியில் ஆர்மேனியர்களைத் தவிர அசேரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் முதலாவதாக ஆர்மேனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்.
அதன் பின்னர் ஓட்டோமான் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
பெரும்பான்மையான ஆர்மேனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
இருபதாம் நூற்றாண்டில் முதல் இனப்படுகொலை.
ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 29 அக்டோபர் 2019 அன்று ஏற்றுக்கொண்டது.
20-ஆம் நூற்றாண்டில் தற்கால துருக்கியின் பேரரசு தன் படைபலத்தால் ஆர்மேனிய மக்களைக் கொன்றது இனப்படுகொலையே என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் துருக்கி நாட்டு அதிபர் ஆர்மேனிய இனப்படுகொலைக்கு எச்சான்றும் இல்லை என மறுத்துள்ளார்.
ஆர்மேனிய இனப்படுகொலை பின்னணி:
பதினைந்தாம் நூற்றாண்டு முதல், ஒட்டோமான் சாம்ராஜ்யத்திற்குள்ளேயே , ஆர்மேனிய இனத்தவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மை மக்கள் குழுவாக வாழ்ந்தனர். சுன்னி முஸ்லீம்கள் இருந்த ஒட்டோமான் துருக்கிய ஆட்சியாளர்களைப் போலன்றி, ஆர்மேனியர்கள் பழமைவாத கிறிஸ்தவர்கள் ஆவார்.
அக்காலத்தில் ஆர்மேனிய குடும்பங்கள் கடும் வரி விதிப்புக்கு உட்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒட்டோமான் ஆளும் சக்தி மற்றும் கலாச்சாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், வெவ்வேறு மதங்களின் உறுப்பினர்களுக்கிடையேயான உறவுகள் மோசமடையத் தொடங்கியது.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் அழுத்தத்தை எதிர்கொண்ட ஒட்டோமான் அரசாங்கம் அதன் கிறிஸ்தவ பகுதிகளைகையாளுவதற்கு அழுத்தம் அதிகரித்தது. அத்துடன் இந்த விஷயங்களை மோசமாக்குவதற்கு, மற்ற கிறிஸ்தவப் பகுதிகள் முற்றிலுமாக பேரரசை விட்டு விலகிப்போயின.
குறிப்பாக கிரேக்கம், பல்கேரியா, அல்பேனியா, செர்பியா இனத்தவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி இருபதுகளில் ஒட்டோமான் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து சென்றனர்.
ஆயினும் ஆர்மேனிய மக்கள் 1870களில் பாரிய முறையில் கடுமையான ஓட்டோமான் ஆட்சியின் கீழ் அமைதியற்றவர்களாகிவிட்டனர். ஆர்மீனியர்கள் ரஷ்யாவைப் நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.
இதன்பின்னர் அவர்கள் பல அரசியல் கட்சிகள் மற்றும் சுய பாதுகாப்புக் கழகங்களை உருவாக்கினர். ஒட்டோமான் சுல்தான் அப்துல் ஹமீத் II கிழக்கு துருக்கியில் உள்ள ஆர்மேனிய பகுதிகளில் வேண்டுமென்றே வன்முறையை தூண்டியதுடன், வரிகளை உயர்த்தினான்.
1894-96 ஆம் ஆண்டில் ஹமிடான் படுகொலைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தன. அதில் 300,000 ஆர்மேனியர்கள் இறந்தனர்.
கலகத்தனமான 20 ஆம் நூற்றாண்டு:
ஜூலை 24, 1908 இல், இளம் துர்க் புரட்சி சுல்தான் அப்துல் ஹமீத் II பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு ஒரு அரசியலமைப்பு முடியாட்சி நிறுவப்பட்டது. ஒட்டோமான் அரசில் ஆர்மேனியர்கள் புதிய, நவீனமயமாக்கல் ஆட்சியின் கீழ் மிகவும் நியாயமான முறையில் நடத்தப்படுவார்கள் என்று நம்பினர்.
அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், இளம் துருக்கியர்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் எழுந்தது.
 
பால்கன் போரில் ஓட்டோமான் பேரரசு தோல்வி:
1912 ஆம் ஆண்டில், ஓட்டோமான் பேரரசு பால்கன் போரில் தோல்வி அடைந்தது. அதன் விளைவாக ஐரோப்பாவில் அதன் நிலத்தை 85% இழந்தது. அதே சமயம், இத்தாலி பேரரசில் இருந்து கடலோர லிபியாவை கைப்பற்றியது. இழந்த பிரதேசங்களிலிருந்து வந்த முஸ்லீம் அகதிகள், அவர்களில் பெரும்பாலோர் பால்கன் நகரத்தில் வெளியேற்றப்பட்ட மற்றும் இனவழிச் சுத்திகரிப்புக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
அசௌகரியத்திற்கு உள்ளான அகதிகளில்்850,000 வரை, பால்கன் கிறிஸ்துவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அனடோலியாவின் ஆர்மேனிய மேலாதிக்க பகுதிகள் அனுப்பப்பட்டனர்.
முதலாம் உலகப் போர் :
முதலாம் உலகப் போரில் ஆர்மேனிய மக்களின் பாதுகாவலர்களான ஜெனரல் நிக்கோலை யூடியெனின் கீழ் இருந்த ரஷ்ய படையால் 1915 மே மாதம் பல நகரங்கள் விடுவிக்கப்பட்டது.
இந்த ரஷ்ய தலையீடு மீதமுள்ள ஒட்டோமான் நிலங்களில் ஆர்மீனியர்களுக்கு ஆதரவாக துருக்கியின் பார்வையில் இருந்து, ஆர்மேனியர்களை விடுவிக்க ஒத்துழைத்தனர்.
ரெட் சண்டே தூக்குமேடை :
 கான்ஸ்டான்டிநோபில், ஓட்டோமான் அரசாங்கம் ஏறக்குறைய 250 ஆர்மேனிய தலைவர்களும் புத்திஜீவிகளும் ஏப்ரல் 23 மற்றும் 24, 1915 அன்று கைது செய்தது. அவர்கள் தலைநகரிலிருந்து நாடு கடத்தப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டனர். இது ரெட் சண்டே சம்பவம் என்று அழைக்கப்படுகிறது.
அத்துடன் அந்த நேரத்தில் காலபோலியில் படையெடுத்து வந்த நேச நாடுகளின் சக்திகளுடன் தொடர்புபடுத்து ஆர்மேனியர்களை குற்றம்சாட்டி பலர் தூக்கிலிடப்பட்டனர்.
1915 மே 27 ஆம் தேதி ஒட்டோமன் பாராளுமன்றம் தெஹ்ரிக்கர் சட்டத்தை நிறைவேற்றியது, நாடு தழுவிய முழு இன ஆர்மேனிய மக்களை கைது செய்தல் மற்றும் நாடுகடத்தலுக்கு அனுமதித்தது.
1915 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் பின் செப்டம்பர் 13, 1915 ல் “கைவிடப்பட்ட சொத்துகள் சட்டம்” இரண்டாவது சட்டமானது, ஒட்டோமான் அரசாங்கத்திற்கு நிலம், வீடுகள், கால்நடைகள் நாடு கடத்தப்பட்ட ஆர்மேனியர்களுக்குச் சொந்தமான சொத்தை அபகரிக்க அங்கீகரித்தது.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்த இனப்படுகொலைக்கு மேடை அமைத்தன.
ஆர்மேனிய இனப்படுகொலை:
துருக்கிய படையால் நூறாயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் சிரிய பாலைவனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பலர் இறந்தும் விட்டனர்.
சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் இடையே துருக்கிய எல்லைகளைச் சுற்றி, தொடர்ச்சியான 25 சித்திரவதை முகாம்களில் புல், மூலிகைகள், வெட்டுக்கிளிகளையே சாப்பிட்டனர்.
அங்கே மரண விகிதம் பட்டினி மற்றும் நோய் இருந்து மிகவும் அதிகமாக இருந்தது. ஆர்மேனியர்கள் நாடு கடத்தப்பட்டு சுமார் 5,000 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மக்களின் உடலங்கள் ஒரு கட்டிடத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டன.
டிராப்சன் மாகாணத்தில், ஆர்மீனிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு, கருங்கடலுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு பின்னர் மூழ்கடிக்கப்பட்டனர்.
இறுதியில், 600,000 முதல் 1,500,000 வரையான ஆர்மேனியர்கள், பஞ்சம், பட்டினியால் இறந்தனர். ஆயினும் துருக்கி அரசாங்கம் இதனை பதிவு செய்யவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை. ஆயினும் ஜேர்மனிய தரவுப்படி துணை கான்ஸல் மேக்ஸ் எர்வின் வான் ஸ்க்புப்னெர் ரிக்ட்டர் 1,000,000 ஆர்மீனியர்களை படுகொலை செய்ததாக மதிப்பிட்டுள்ளார்.
இராணுவ அதிகாரிகளுக்கு
எதிராக நீதிமன்ற விசாரணை :
 ஒட்டோமான் சாம்ராஜிய படுகொலைகளுக்கு பொறுப்பாளர்களை ஒப்படைக்கும்படி செவ்ரெஸ் உடன்படிக்கையில் (1920) நேச நாடுகள் கோரின. பல ஒட்டோமான் அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் நேச நாட்டு சக்திகளிடம் சரணடைந்தனர். அவர்கள் மூன்று வருடங்களாக மால்டாவில் விசாரணை செய்யப்பட்டனர்.
போலந்தில் 1943 இல், சட்டப் பேராசிரியரான ரபேல் லெம்மிக், ஆர்மேனிய இனப்படுகொலை பற்றிய ஒரு விளக்கத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆர்மேனிய இனப்படுகொலை இன்று 20 ஆம் நூற்றாண்டின் மிக கொடூரமான கொடூரங்களில் ஒன்றாகும், இந்த நூற்றாண்டின் கோர வடுக்கள் நிறைந்த அட்டூழியங்களால் பதியப் படுத்தப்பட்டுள்ளது.
 
         – ஐங்கரன் விக்கினேஸ்வரா
 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More