September 21, 2023 1:54 pm

சிந்துவெளி நாகரிகம் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 13சிந்துவெளி நாகரிகம் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 13

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பல மேற்குலக ஆய்வாளர்களும் இந்திய ஆய்வாளர்களும் கூட சுமேரிய நாகரிகத்தையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்பு படுத்துவதில்லை.

மெசொபொத்தேமியாவிலிருந்து அருகில் இருந்தது சிந்துவெளிப் பள்ளத்தாக்கு. அடுத்து நயில் நதி. சுமேரியருடன் சேர்ந்து வாழ்ந்த மற்றைய சில இனங்கள் நயில் நதியைத் தேடிப் போக சுமேரியர் சிந்துவெளியை நாடிச் சென்றனர். அப்படி இடம்பெயர்ந்தபோது பிரிந்துசென்ற இனமொன்று பாகிஸ்தானுக்கும் பலுசிஸ் தானுக்கும் இடையே தங்கியதாகவும் அவர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவ்வினம் பிராகுஇஸ் (Brahuis) என்றும் அழைக்கப்படுகிறது. அவர்கள் அங்கு கிறித்துவுக்கு முன் 2000 ஆண்டளவில் குடியேறினர் என்றும் கூறுகின்றனர்.

A1

சிந்துவெளி மிகப் பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. முன்பு மெசொபோத்தேமியாவில் குறைந்த அளவு காணிகள் இருந்ததனால் கோயில்களின்கீழ் நிலக் கண்காணிப்பு இருந்தது. அதனால் காணிகள் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இங்கு நிலப்பரப்பு அளவுக்கதிகமாக இருந்ததால் காணி தொடர்பான கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

மெசொபொத்தேமியாவில் இருந்த ஒரு கட்டுப்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் இடப்பெயர்வின் போது சிந்து வெளியில் உடனே நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஏனெனில் இங்கு வேண்டிய அளவுக்கு அதிகமாக நிலப்பரப்புக் காணப்பட்டதால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மெசொப்பொத்தேமியாவில் கட்டுப்பாடுகள் சிலவற்றிற்குப் பழகிப்போய் இருந்த மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அதை மீற வேண்டி ஆசை இருந்திருக்கலாம். அத்துடன் எவ்வித வசதிகளும் இல்லாது அனைத்தையும் விட்டுவிட்டு வந்ததனால் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய தேவையும் இருந்ததனால் அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டியும் ஏற்பட்டிருக்கலாம்.

A3

சுமேரியருடையதைப் போன்றும் அதனிலும் சிறப்பாகவும் வடிவமைக்கப் பட்ட கட்டடங்களும், கால்வாய்களும், குடியிருப்புகளும் சிந்துவெளியில் காணப்பட்டாலும் கூட எதனால் ஒருவரும் இரண்டையும் தொடர்புபடுத்தாது விட்டுள்ளனர் அல்லது வேண்டுமென்றே அந்த விடயத்தை உதாசீனப் படுத்துகின்றனர் என்றுதான் புரியவில்லை

அகழ் நிலம் 1

A4

அகழ் நிலம் 2

A5

மெசொபொத்தேமியாவில் எப்படி வீடுகளையும் கோவில்களையும் சுமேரியர் அமைத்தனரோ அதே போல் சிந்துவெளியிலும் அமைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்னும் அதிக தொழில் நுட்பத்துடன் வீடுகளையும் நகரங்களையும் வீதிகளையும் ஏன் மாடிவீடுகள் பாலங்களைக் கூட அங்கு கட்டி வாழ்ந்தார்கள். அங்கே செந்நிற உப்பு அளவுக்கதிகமாக இயற்கையாக விளைந்தது. அது மருத்துவப் பயன்பாட்டிற்க்குப் பெரிதும் உதவியது எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் சிந்து வெளிக்குச் சென்றதன் பின்னர் வனையப்பட்ட பானைகளிலும் மற்றைய மட்பாண்ட வகைகளிலும் சுமேரியரின் தொடர்ச்சி காணப்பட்டாலும் வரி வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. காலம் செல்ல அங்கு காணப்பட்ட வெண்ணிறக் கற்களைக் கொண்டும் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால் மெசொபொதேமியாவில் எழுதப்பட்ட களிமண் தட்டுக்கள் சிந்து வெளியில் காணப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தொடர்பும் இல்லை என நீங்கள் முடிவுகட்டுவது தெரிகிறது. அவசரம் வேண்டாம். சுமேரியர் இடம்பெயர்வதற்கு முன்பதாக புற்களிலும் ஓலை போன்றவற்றிலும் எழுத ஆரம்பித்திருக்கலாம். அதன் தொடர்ச்சி இங்கும் அவ்வாறே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

 

 

தொடரும் …

 

 

Nivetha  நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

 

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history-6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-9/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-10/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-11/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history12/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்