செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், 24 மணி நேர பகலும்!

துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், 24 மணி நேர பகலும்!

2 minutes read

பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப் பட்டது. அந்த  இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது.

arctic_370இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபனி துந்திரப் பகுதியாகவே உள்ளது. தரைக்கு கீழும் கூட பனி! வடக்கில் 66.33 அட்ச ரேகைப் பகுதிதான் ஆர்க்டிக் வட்டம் (Arctic circle) எனப்படுகிறது. இங்கு ஓர் அதிசயத்தைக் காணலாம். நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார். இது ஜூலை மாதம் நடக்கும். ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பத்தின் அளவு அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். ஆர்க்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் உள்ள/மறையாத பகலும் காணப்படும்.

நாள் முழுவதும் சூரியன்!

வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி. மீ வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறார். இங்கே சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தெரியும். பின்லாந்தின் கால்பகுதி வட ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது. எனவே, அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகரவே/மறையவே மாட்டார். நார்வேயின் சவால்பார்ட் (Svalbard) என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 நாட்கள்) 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக்கொண்டு காட்சி அளிப்பார். அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.

துருவப்பகுதிகளில், 60 டிகிரி அட்ச ரேகைகளுக்கு மேல் போய்விட்டால், அதாவது ஆர்க்டிக்கு தெற்கே/அண்டார்க்டிக்காவுக்கு வடக்கே, அந்திமாலை ஒளியைத் தரும். வெளிச்சம் இருக்கும். மின் விளக்கு இன்றி படிக்கலாம். இந்த தினங்களை செயின்ட் பீட்ச்பர்க் மற்றும் ரஷ்யாவில் வெள்ளி இரவு தினங்கள் (Silver Night Days) என ஜூன் 11 – ஜூலை 2 வரை, இந்த நாட்களில் எல்லாம், கலாச்சார விழாக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு புதிதாக வருபவர்களுக்கு, இரவில் சூரியன் தெரிவதால் உறங்கச் செல்ல கொஞ்சம் பிரச்சினை ஆக இருக்கும்.

 

நன்றி : பேரா.சோ.மோகனா| கீற்று இணையதளம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.