Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜோர்தானிய முடிக்குரிய இளவரசருக்கு சவூதி செல்வந்தரின் மகளுடன் நிச்சயதார்த்தம்

ஜோர்தானிய முடிக்குரிய இளவரசருக்கு சவூதி செல்வந்தரின் மகளுடன் நிச்சயதார்த்தம்

2 minutes read

ஜோர்தானிய முடிக்குரிய இளவரசர் ஹஸைன் சவூதி அரேபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் செல்வந்த வர்த்தகப் பிரமுகர் ஒருவரது மகளுமான ரஜ்வா அல் சாயிப்பை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.

சவூதி அரேபிய றியாத் நகரிலுள்ள மணமகளின் இல்லத்தில் விமரிசையாக 17 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் 18 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியாகியுள்ளன.

முடிக்குரிய இளவரசரின் தங்கை இளவரசி இமானின் (25 வயது) திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்று ஒரு சில வாரங்களிலேயே மேற்படி நிச்சயதார்த்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவர் வெனிசுலா முதலீட்டாளரான ஜமீல் தெர்மியோரிஸை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் முடிக்குரிய இளவரசர் ஹஸைனுக்கும் ரஜ்வாவுக்குமிடையில் காதல் எதுவும் இருந்ததா அல்லது அவர்களது திருமண பந்தம் தொடர்பில் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டதா என்பது அறியப்படவில்லை.

பிரித்தானிய சான்ஹேர்ஸ்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான இளவரசர் ஹஸைனுக்கும் (28 வயது); ரஜ்வாவுக்குமிடையில் (28 வயது) இடம்பெற்ற இந்தத் திருமண நிச்சயதார்த்தத்தில் ஜோர்தான் மகாராணி ரனியா (51 வயது) மற்றும் அவரது கணவரான மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ் (60 வயது ஆகியோர் பங்கேற்றனர்.

மேற்படி திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பானது ஜோர்தானிய அரச குடும்பத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் மத்தியில் மேற்படி ஜோடியின் திருமணம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த ரஜ்வா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவநாகரிக வடிவமைப்புத் துறையில் கற்கைநெறியைப் பூர்த்தி செய்திருந்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நிர்மாணக் கலை நிறுவனத்தில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவர் தற்போது சவூதி அரேபியாவிலுள்ள வடிவமைப்பு கூடமான டிஸைன்லப் எக்ஸ்பீரியன்ஸில் பணியாற்றி வருகிறார்.

அதேசமயம் மன்னர் அப்துல்லாஹ் மற்றும் மகாராணி ரனியாவின் 4 பிள்ளைகளில் மூத்தவரான முடிக்குரிய இளவரசர் ஹ{ஸைன் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்குத் தலைமை தாங்கி அந்தகைய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வயதில் மிகவும் இளமையானவர் என்ற பெயரைப் பெற்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More