செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரஷ்ய – உக்ரைன் போருக்கு எதிராக நூதனப் போராட்டம்

ரஷ்ய – உக்ரைன் போருக்கு எதிராக நூதனப் போராட்டம்

0 minutes read

நேட்டோ படையுடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருடங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன்காரணமாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனுக்கு பல மில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

அதே சமயம் சீன அரசு, ரஷ்யாவுக்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றது.

இந்நிலையில், ரஷ்யாவில் இஷெவ்ஸ்க் என்ற நகரில் இளைஞர் ஒருவர் போருக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.

அதாவது அந்த இளைஞரின் கையில் வைத்திருந்த பதாகையில் “நீங்கள் போருக்கு எதிராக இருந்தால் என்னை கட்டிப்பிடித்துச் செல்லுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பலரும் அவரை கட்டிப்பிடித்து தமது ஆதரவை தெரிவித்துச் சென்றனர் .

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக அவ்விளையுனை கைது செய்தனர்.

இந்நிலையில் அவருக்கு 15,000 ரூபில்கள் அபராதம் விதிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.