உள்நாட்டு குறுகிய நேர விமான சேவைகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதே அதன் நோக்கம் என்று BBC செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், ரயிலில் இரண்டரை மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய இடங்களுக்கு இனி விமான சேவைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்து இரு வருடங்களுக்கு பின்னர் அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறுகிய நேர விமான சேவைகள் தடை செய்யப்படுவது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.