செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அகதிகளுக்கும் கல்வி மற்றும் வேலை தேவை என வலியுறுத்தல்

அகதிகளுக்கும் கல்வி மற்றும் வேலை தேவை என வலியுறுத்தல்

1 minutes read

மலேசியாவில் அகதிகளுக்கும் கல்வி, வேலை செய்வதற்கான உரிமை மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என அந்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழு வலியுறுத்தியிருக்கிறது.

அத்துடன், அகதிகளை குற்றவாளிகளாக்கும் கொள்கைகளைப் பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.

அகதிகளை குற்றவாளிகளாக்கும் கொள்கைகளுக்கு பதிலாக அகதிகளை பாதுகாக்கக்கூடிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என இக்குழுவுக்கு தலைமை தாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சியர்லீனா அப்துல் ரஷீத் தெரிவித்திருக்கிறார்.

அகதிகளுக்கு சட்ட ரீதியாக வேலை செய்வதற்கான உரிமை வழங்குவதன் மூலம் மலேசியாவில் உள்ளூர் முதலாளிகளால் அகதிகள் சுரண்டப்படுவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

மலேசியாவில் பெரும்பாலான அகதிகள் கடுமையான, ஆபத்தான, கண்ணியமற்ற வேலைகளை ஈடுபடுத்தப்படும் நிலை உள்ளதாகவும் அவ்வாறு வேலை செய்யும் அகதிகள் குறைவான சம்பளம் அல்லது அதிக நேரம் பணியாற்றுவதற்கு சம்பளமே வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

மலேசியாவில் சுமார் 180,000 அதிகமான பதிவு செய்யப்பட்ட அகதிகள் உள்ளனர். இதில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் ரோஹிங்கியா அகதிகளாக உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.