செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 16 Hockey வீரர்கள் உயிரிழப்பு: இந்தியரை நாடு கடத்த கனடா உத்தரவு

16 Hockey வீரர்கள் உயிரிழப்பு: இந்தியரை நாடு கடத்த கனடா உத்தரவு

0 minutes read

கனடாவின் சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி பஸ் மற்றும் லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 Hockey வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லொறி சாரதி ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை கனடா பொலிஸார் கைது செய்தனர்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்த நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, ஜஸ்கிரத் குற்றவாளி என உறுதியானதையடுத்து அவரது குடியுரிமையை இரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.