செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்; வெற்றி நிச்சயம் என்றார்

கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்; வெற்றி நிச்சயம் என்றார்

1 minutes read

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வியாழைக்கிழமை (22) அறிமுகம் செய்த தென்னிந்திய பிரபல நடிகர் விஜய், “வெற்றி நிச்சயம்” என்றார்.

கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது. 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை நடிகர் விஜய் ஏற்றினார்.

இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி, தமன் இசையமைத்து இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய், “அரசியல் பயணத்தை தொடங்கி பெப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். த.வெ.க கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ் நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக த.வெ.க கொடி அமையும்.

“த.வெ.க மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்படும். ஓர் அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார்.

பாதுகாப்புக் காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே மேற்படி நிகழ்வில் பங்கேற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.