ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் இராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்தியில், ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் இராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.
ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி, ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய இராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார்.
இதேவேளை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர். 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.