செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறதா கட்டார்?

ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறதா கட்டார்?

0 minutes read

ஈரானின் தாக்குதலை மதிப்பீடு செய்து, உரிய பதிலடி கொடுக்கும் உரிமை கட்டாருக்கு இருப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஜேட் அல் அன்சாரி கூறியுள்ளார்.

அல் உதேய்த் தளத்தின்மீது ஈரான் நடத்திய தாக்குதல் தனது அரசுரிமை, ஆகாய வெளி, அனைத்துலகச் சட்டம் மற்றும் ஐக்கிய நாட்டுச் சாசனம் ஆகியவற்றின் மீதான அத்துமீறல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானிய ஏவுகணைகளை கட்டார் வெற்றிகரமாய் இடைமறித்ததாகத் தெரிவித்த அவர், தளத்திலிருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி : கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

அல் உதேய்த் ஆகாயப் படைத்தளம் மீது குறுந்தொலைவு, இடைத்தொலைவு தாழப் பறக்கும் ஏவுகணைகளை ஈரான் பாய்ச்சியதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

நிலைமையை ஆராய்ந்து வருவதாகத் தற்காப்பு அமைச்சின் அதிகாரி கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.