அமெரிக்காவுடன் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட எவ்விதமான பேச்சுவார்த்தையும் கிடையாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் வாரமளவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் அறிவிப்பை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மறுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தங்கள் நலன்களுக்கு உதவுமா என்பதை ஈரான் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஈரான் அணுசக்தி இருப்பிடங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்ட நிலையில், இந்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அரக்ச்சி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா!
ஈரான் அணுசக்தித் திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார்.
இதேவேளை, இத்தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன.