ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள Evin சிறைச்சாலை மீது, இம்மாதம் 23ஆம் திகதியன்று இஸ்ரேல் தாக்குதல் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் சிறைச்சாலை ஊழியர்கள், இராணுவ வீரர்கள், கைதிகள் மற்றும் கைதிகளைப் பார்க்க வந்த குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
எவின் சிறைச்சாலையில் அதிகமாக அரசியல் கைதிகளே இருந்துள்ளனர். ஈரானின் ஆட்சியமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் அந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்டது.
அதேவேளை, அதே நாளின் மாலை வேளையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.