மலேசியாவில் கார் ஒன்று ஆற்றில் மூழ்கிய சம்பவத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கெடா மாநிலத்தில் உள்ள சுங்காய் கொரோக் ஆற்றில் விழுந்த காரிலிருந்து குடும்பத்தினரின் சடலங்களை மீட்கச் சிரமப்பட்டதாகத் தீயணைப்புப் படை தெரிவித்தது.
காரின் மேல் பகுதியை வெட்டி எடுத்த பின்பே சடலங்களை வெளியேற்ற முடிந்தது என்றும் தீயணைப்புப் படை தெரிவித்தது.
6 மாதத்திற்கும் 9 வயதுக்கும் இடைப்பட்ட 4 பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அடங்கிய அந்தக் குடும்பத்தை, ஜூலை 5ஆம் திகதி முதல் காணவில்லை என்று கூறப்பட்டது.
தமான் அமான் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அவர்கள் வீடு திரும்பில்லை.
அவர்கள் காணமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டதாக மலேசிய பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.