செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற ஆணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை!

சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற ஆணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை!

0 minutes read

ஈரானில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வழமை.

இந்நிலையில், ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற ஆணுக்கு நேற்று (12) பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் – புகான் நகரைச் சேர்ந்த குறித்த சிறுமியின் குடும்பத்தார், குற்றவாளியான ஆணுக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மேற்படி நபருக்கு மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தீர்ப்பின் போது நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

மனித உரிமை குழுக்களின் தரவுகளின்படி, உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.