புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க இந்திய விமானங்களுக்கான தடை தொடர்கிறது!

பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க இந்திய விமானங்களுக்கான தடை தொடர்கிறது!

0 minutes read

பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க இந்திய விமானங்களுக்கான தடையை பாகிஸ்தான் மேலும் நீட்டித்துள்ளது.

அதாவது, இந்திய விமான நிறுவனங்களுக்கு தனது வான்வெளியை மூடும் முடிவை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு இந்திய விமானமும் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க முடியாது.

இந்திய நேரப்படி நேற்றுப் பிற்பகல் 3:50 மணிக்கு அமுலுக்கு வந்த இந்த முடிவின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட எந்தவோர் இந்திய விமான நிறுவனம், இராணுவம் அல்லது சிவிலியன் விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது.

ஏப்ரல் 22 அன்று, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்களுக்கு மூடியது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஏப்ரல் 24 அன்று இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.