தென்கொரியாவில் வேலைவாய்ப்புக்கு சென்றிருந்த இளைஞன் ஒருவர் சித்திரவதை செய்யப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடப்பது சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று தென்கொரியா ஜனாதிபதி லீ ஜே மியுங் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தென்கொரியா – சௌத் ஜுல்லா மாநிலத்தில் இருக்கும் ஒரு செங்கல் சூளையில் இம்மாதத் தொடக்கத்தில் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
செங்கல்லுடன் சேர்த்து இலங்கை இளைஞன் கட்டிவைக்கப்பட்டுள்ளார். அவ்வாறு செங்கல்லுடன் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பாரந்தூக்கியில் உயர்த்தப்படுவதை வீடியோவில் பார்க்கமுடிகிறது. அதில் சிரிப்புச் சத்தமும் கேட்கிறது.
“நீங்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்,” என்று ஒருவர் கூறுகிறார்.
வெளிநாட்டு ஊழியரின் நலனைக் காக்கும் ஆர்வலர் குழு ஒன்று சமூக வலைத்தளங்களில் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
செங்கல்லுடன் கட்டிவைக்கப்பட்ட இலங்கை இளைஞன் தற்போது மனநலச் சிகிச்சை பெறுவதாக அக்குழு கூறுகிறது.