ஜெர்மன் நாட்டின் பாடன் வூர்ட்டம்பர்க் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
விபத்து இடம்பெற்ற போது ரயில் சுமார் 100 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களில் 50 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சில பயணிகளுக்கு காயங்கள் பலமாக இருப்பதாக அப்பகுதி தலைமைத் தீயணைப்பாளர் தெரிவித்தார்.
ரயில் சென்று கொண்டிருந்த பகுதியில் கடும் புயல் வீசியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜெர்மன் தேசிய ரயில் சேவை நிறுவனம் Deutsche Bahnஇன் தலைமை நிர்வாகி இந்த விபத்து அதிர்ச்சியும் வருத்தமும் தந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் சம்பவ இடத்தைப் பார்வையிடவிருக்கிறார்.