செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் செஞ்சிலுவை சங்கத்திடம் உதவி கேட்கும் இஸ்ரேல் பிரதமர்!

செஞ்சிலுவை சங்கத்திடம் உதவி கேட்கும் இஸ்ரேல் பிரதமர்!

0 minutes read

காஸாவில் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களுக்கு உணவு மற்றும் மருத்துப் பொருட்களை வழங்க செஞ்சிலுவை சங்கத்திடம் உதவி கேட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ கூறினார்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வட்டாரத் தலைவரிடம் அது குறித்துப் பேசியிருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

காஸாவில் 50 பிணையாளிகள் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களில் 20 பேர் மட்டும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இதேவேளை, காஸாவுக்கான நிவாரணப் பொருள்களை நிரந்தரமாக அனுமதித்து, வான்வெளித் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொண்டால் மாத்திரமே செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பிணையாளிகளுக்கான உதவியைச் சேர்க்கத் தயாராக உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.