சமூக ஊடகத்தின் ஆபத்தை உணருமாறும் உண்மையான நட்பைப் பேணிக்காக்குமாறும் இளைஞர்களிடம் போப் லியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
ரோம் நகருக்கு அருகே டோர் வெர்க்காட்டா பல்கலைக்கழகத்தில் புனித இளைஞர் விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றிய போதே போப் மேற்படி கேட்டுக்கொண்டார்.
கத்தோலிக்க இளைஞர்கள் சிறந்த உலகைக் கட்டி எழுப்புவதில் கைகொடுக்க வேண்டும் என்றும் போப் லியோ வலியுறுத்தினார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் போப் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் கலந்துகொள்ளும் மிகப் பெரிய நிகழ்வாக இதுவாக பார்க்கப்படுகிறது.
விழாவில் 146 நாடுகளைச் சேர்ந்த 800,00க்கும் அதிகமானஇளைஞர்கள் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.