புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த கப்பல் ஒன்று ஏமன் நாட்டுக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா நிறுவனத்தின் குடியேற்ற அமைப்புக் கூறியுள்ளது.
குறித்த கப்பலில் பயணித்த 157 பயணிகளில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் காணவில்லை என்று அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலோர் எத்தியோப்பியர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. எத்தியோப்பியாவில் இனப்பூசல் நீடிப்பதால் பலரும் ஏமன் வாயிலாக வளைகுடா நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்ல முற்படுகின்றனர்.
இதனால் பலர் உயிர் ஆபத்துகளுக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டில் மாத்திரம் அவ்வழியாகப் பயணம் செய்தோரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக அனைத்துலகக் குடியேற்ற அமைப்பு (International Organization for Migration) சுட்டிக்காட்டியுள்ளது.