செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஜப்பானில் அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள்; நினைவஞ்சலிகள் ஏற்பாடுகள்!

ஜப்பானில் அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள்; நினைவஞ்சலிகள் ஏற்பாடுகள்!

0 minutes read

இவ்வாண்டுடன் (2025) ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாக்கி நகர்களில் அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதையொட்டி, நகரங்களின் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை மறுநாள் ஹிரோஷிமாவிலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாகாசாக்கியிலும் நினைவஞ்சலி நடைபெறும்.

நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில் 120 நாடுகள் மற்றும் வட்டாரங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

முதல் முறையாக தைவான் மற்றும் பாலஸ்தீன வட்டாரம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1945ஆம் ஆண்டு, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாக்கி நகர்களில் அமெரிக்கா நடத்திய அணுக்குண்டுத் தாக்குதலில் ஏறக்குறைய 214 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.