இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ள ஐ.நா, காஸாவின் பேரழிவை தடுக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தொடர் தாக்குதல்களோடு காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக வெளிவரும் தகவல்கள் அடிப்படையில், அது உண்மையாக இருப்பின் அது பேரழிவை ஏற்படுத்தும் என்றும், ஐ.நா எச்சரித்துள்ளது.
அது இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐ.நா கடுமையாக எச்சரித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் திட்டத்தை ஆதரிப்பீர்களா என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது இஸ்ரேலைப் பொறுத்தது என்று பதிலளித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி : பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க 15 நாடுகள் கூட்டறிக்கை!
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டவுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என தெரிவிக்கப்படுகிறது.