தாய்லாந்து – கம்போடியா தரப்பினர், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்போது கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர்களை அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின்படி நடத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அத்துடன், மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்தி : தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலில் 30 பேர் பலி!
கடந்த மாதம் 28ஆம் திகதி சண்டை நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் முதலில் சம்மதித்தன. அதன்படி, இனி எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட நேர்ந்தால் அது மோசமடைவதற்கு முன்பு இரு தருப்பும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண இணங்கியுள்ளன.
மேற்படி ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற இரு நாடுகளும் உறுதியளித்தன.