காஸாவைக் கைப்பற்றும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை ஜெர்மன் அதிரடியாக நிறுத்தியுள்ளது.
தனது ஆயுதங்கள் காஸாவில் பயன்படுத்தப்படலாம் என்பதால் ஜெர்மன் அந்த முடிவை எடுத்துள்ளது.
இது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஹமாஸிடமிருந்து காஸாவை விடுவிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்று ஜெர்மான் பிரதமரிடம் நெட்டன்யாஹு தொலைபேசியில் கூறியுள்ளார்.