செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்; ஒரே நாளில் 100 பேர் கொல்லப்பட்டனர்!

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்; ஒரே நாளில் 100 பேர் கொல்லப்பட்டனர்!

0 minutes read

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேர இடைவெளியில் இஸ்ரேலின் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், சுமார் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று காஸா சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி : Al Jazeera ஊடகவியலாளர்கள் நால்வர் காஸாவில் கொல்லப்பட்டனர்!

இருப்பினும், இஸ்ரேல் அதைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்தும் காஸாவில் தாக்குதலை நடத்தி வருகிறது.

காஸா மக்கள் உணவு, உதவிப் பொருள்களைப் பெற வரிசையில் காத்திருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் மேலும் ஐவர் காஸாவில் உயிரிழந்தனர்.

அவர்களையும் சேர்த்து உணவின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 227ஆக உயர்ந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.