7
தைவானின் தென் பகுதியை பூடூல் சூறாவளி நேற்று (13) கடந்தது.
இதனால் பல நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
குறிப்பாக, தைபேயிலிருந்து சிங்கப்பூருக்கான சில விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இப்பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதாய் Scoot விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.
அதேவேளை, சிங்கப்பூர் பயண முகவர் நிறுவனங்கள் தைவானுக்குச் செல்லவிருந்த பயணிகளுக்கு உதவி வருவதாகக் கூறின.