மீண்டும் ஒருமுறை போக்குவரத்து வேலைநிறுத்தத்தால் இலண்டன் நகரம் ஸ்தம்பித்துள்ளது. ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொடர்ச்சியான பிரச்சினைகள் காரணமாக நிலத்தடி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில், கடல் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இந்த வாரம் முழுவதும் தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்தங்கள் வாரம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் இன்று புதன்கிழமை அனைத்து இலண்டன் நலத்தடி ரயில் சேவைகளும் காலை பயணத்தின் போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய பயணக் குழப்பங்கள், பயணிகளை மாற்று போக்குவரத்து முறைகளைக் கண்டறிய கட்டாயப்படுத்தியுள்ளது. நகர ஊழியர்களும் சுற்றுலாப் பயணிகளும் சைக்கிள், பஸ் மற்றும் படகுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
தலைநகரில் உள்ள பஸ் நிறுத்தங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன, கிரேட்டர் இலண்டன் பகுதிகளில் வாடகை சைக்கிள் நிறுத்தங்கள் காலியாக இருந்தன.
திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் “குறைந்தபட்ச” சுரங்கப்பாதை சேவைகளுக்குப் பிறகு, புதன்கிழமை எந்த சுரங்கப்பாதை சேவைகளும் செயல்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலிசபெத் லைன் மற்றும் இலண்டன் ஓவர் கிரவுண்ட் சேவைகள் சாதாரணமாக இயங்குகின்றன. இருப்பினும், இவை ஹைபரி மற்றும் இஸ்லிங்டன் மற்றும் ஓல்ட் ஸ்ட்ரீட் போன்ற சுரங்கப்பாதை இணைக்கப்பட்ட நிலையங்களில் நிற்காது.
செவ்வாய்கிழமை, செப்டெம்பர் 9 முதல் வியாழக்கிழமை, செப்டெம்பர் 11 வரை டாக்லாண்ட்ஸ் லைட் ரயில்வேயில் (DLR) சேவை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்படாத எலிசபெத் லைன் மற்றும் இலண்டன் ஓவர் கிரவுண்டில் அதிக பயணிகள் காணப்பட்டனர். இதனால் ஃபாரிங்டன் மற்றும் லிவர்பூல் ஸ்ட்ரீட் போன்ற நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டது.
இலண்டனில் சுற்றி வர சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.