வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியில் இருந்து புதிய வரி நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவில் தொழிற்சாலை வைத்திருக்கும் மருந்து நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் தமது Truth Social சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சரக்கு லொரிகளுக்கு 25 சதவீத வரியையும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதற்குத் தேசியப் பாதுகாப்பு ஒரு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவிர வேறு சில பொருட்களுக்கும் அவர் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, வீட்டுப் புதுப்பிப்புப் பொருள்களுக்கு 50 சதவீத வரி மற்றும் அறைகலனுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.