பொதுவெளியில் இஸ்ரேலை கண்டிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக நன்றி கூறுகின்றனர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுக்கூட்டத்தில் நாட்டின் தலைவர்களும் உரையாற்றி வருகின்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை உரையாற்ற அழைக்கப்பட்டார்.
இதன்போது, அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறியதோடு, பலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், பிரதிநிதிகள் யாருமற்ற நிலையில் வெறிச்சோடிய ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் நெதன்யாகு உரையாற்றியுள்ளார்.
அந்த உரையின் போது அவர், “பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரையில் இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும்வரை இப்போர் தொடரும்.
“இங்கு யாரும் ஒக்டோபர் 7ஆம் திகதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால், எங்களுக்கு அது ஞாபகத்தில் இருக்கிறது.
“இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டு, தீமையை ஏற்கின்றனர். பொதுவெளியில் இஸ்ரேலை கண்டிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக நன்றி கூறுகின்றனர்” என்றார்.