மியன்மாரில் திருவிழாக் கூட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் மரணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சாவ்ங் யூ (Chaung-U) எனும் இடத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட திருவிழாவில் இராணுவம் இரண்டு வெடிகுண்டுகளைப் போட்டது. இதில் சுமார் 80 பேர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டுகள் விழுவதற்குச் சற்று முன்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இல்லையேல் உயிருடற்சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் மியன்மார் மக்களுக்கு உடனடிப் பாதுகாப்புத் தேவை என்பதை உணர்த்துவதாக மனித உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது.