உயர்கல்வித் துறையில் இங்கிலாந்து பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் வேலை இழப்புகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் 12,000 க்கும் மேற்பட்ட வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி சங்கம் (UCU) வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் மேலும் 3,000 வேலைகளுக்கு இணையான தாக்கம் ஏற்படலாம் என்றும் UCU தெரிவித்துள்ளது.
கல்வித்துறை எதிர்கொள்ளும் நிதிச் சவாலின் தீவிரத்தின்படி, இங்கிலாந்தில் 10 பல்கலைக்கழகங்களில் 4 நிதி பற்றாக்குறையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
UCU உறுப்பினர்கள் இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகியுள்ளனர்.
ஊழியர்கள் மனச்சோர்வு மற்றும் கோபம் அடைந்துள்ளதாகவும், மாணவர்களும் இதன் தாக்கத்தை உணர்வதாகவும் UCU மேலும் தெரிவித்துள்ளது.
தனது பணி முடிவடைவது மட்டுமல்லாமல், கல்வியியல் வாழ்க்கையின் முடிவையும் எதிர்கொள்வதாக வேலை இழப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் பிராட்போர்டு பல்கலைக்கழக வேதியியல் விரிவுரையாளரான டொக்டர் சாக் ஹியூஸ் கவலை தெரிவித்தார்.
அவர் தனது வேலையை இழந்தால், வாடகை செலுத்த முடியாமல் தனது 40 வயதில் மீண்டும் தாயுடன் வந்து வாழ நேரிடும் என்றும் கூறினார்.