இஸ்ரேலியப் பிணையாளிகள் மேலும் இருவரின் சடலங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பெறப்பட்ட குறித்த இரண்டு சடலங்களை அடையாளம் காணப் பரிசோதனை நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
சிறப்புக் கருவிகள் ஏதுமின்றி எஞ்சிய பிணையாளிகளின் சடலங்களைக் கண்டறிய இயலாது என்று ஹமாஸ் கூறுகிறது.
கடைசியாக வழங்கப்பட்ட சடலங்கள் இரண்டும் பிணையாளிகள் என்று உறுதிசெய்யப்பட்டால், காஸாவில் இன்னும் 19 பிணையாளிகளைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
காஸா அமைதித் திட்டத்தின் முதற்கட்ட உடன்பாட்டின்படி, உயிரிழந்த 28 பிணையாளிகளின் சடலங்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும்.